Monday, 9 October 2017

2017 ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு (NOBEL PRIZE FOR ECONOMICS 2017)

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை, அமெரிக்காவை சேர்ந்த, பிரபல பொருளாதார நிபுணர், ரிச்சர்ட் தாலெர், 72, பெறுகிறார்.அமெரிக்காவின், சிகாகோ பல்கலையை சேர்ந்த பொருளாதார நிபுணர், ரிச்சர்ட் தாலெர், மனிதப் பண்புகள், எவ்வாறு, தனி நபரின் முடிவுகளை பாதிக்கின்றன. அதன் விளைவால், சந்தைகளில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து, சிறப்பான விளக்கம் அளித்தவர். தாலெர், 'நடத்தை பொருளாதாரம்' என்ற துறையில், முன்னோடியாக திகழ்கிறார். இதில், உளவியல் ஆய்வின் அடிப்படையில் அறியப்பட்ட கோட்பாடுகள் பின்பற்றப்பட்டு, பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில், அவர், நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு நோபல் கமிட்டி கூறியுள்ளது. தாலெருக்கு, நோபல் பரிசுடன், ஏழு கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment