Tuesday, 22 August 2017

21st AUGUST 2017 CURRENT AFFAIRS FOR TNPSC / BANK / UPSC &OTHER GOVERNMENT EXAMS IN TAMIL PDF

'முத்தலாக்' நடைமுறைக்கு 6 மாதங்கள் இடைக்கால தடை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
  • இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் முத்தலாக் வழக்கத்தை அரசியல் சட்ட ரீதியாக செல்லும் என்று கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், அதேசமயம், இதுதொடர்பாக மத்திய அரசு உரிய சட்டத்தை இயற்றும் வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
  • முத்தலாக் முறையை முஸ்லிம் ஆண்கள் தவறாக பயன்படுத்தி விவாகரத்து செய்வதால், அப்பாவி பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 5 ரிட் மனுக்களை இஸ்லாமிய பெண் ஒருவர் தாக்கல் செய்தார்.
  • இந்த மனுக்கள் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்தது. பின்னர், இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.அரசியல் அமர்வு
  • முத்தலாக் முறை இஸ்லாம் மதத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றுதானா, முத்தலாக் வழங்கப்படுவதில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து ஆராயப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், நாரிமன், யூ.யூ. லலித், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விசாரணையை நடத்தினர்.
எதிர் கருத்து
  • இந்த விசாரணையில், அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் வாரியம், அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் மத்திய அரசின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. முத்தலாக் என்ற முறையைத் தவறாக பயன்படுத்தி ஸ்கைஃப், வாட்ஸ் அப் மூலம் தலாக் சொல்லி விவாகரத்து அளிப்பதாகப் பெண்கள் அமைப்பினர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டன.
இடைக்காலத் தடை
  • முத்தலாக் முறையில் முஸ்லிம் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது. முத்தலாக் வழக்கில் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று முத்தலாக் முறைக்கு இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.
புதிய சட்டம்
  • 3 நீதிபதிகள் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக தீர்ப்பளித்தனர். அதேநேரம் தலைமை நீதிபதி கெஹர் மற்றும் நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் நாடாளுமன்றம் சென்றுவிட்டனர். எனவே 3:2 என்ற நீதிபதிகளின் விகிதம் அடிப்படையில் முத்தலாக்கிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், முத்தலாக் தொடர்பாக உரிய வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை முத்தலாக் நடைமுறைக்கு இடைக்காலத் தடை இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை நீக்கம்! கேரள ஐகோர்ட்டு அதிரடி
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடை நீக்கப்பட்டுள்ளது. கேரள ஐகோர்ட்டு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • மேட்ச் பிச்சிங்கில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந், தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
  • இந்த வழக்கில் கேரள ஐகோர்ட்டு, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
  • கடந்த 2013 ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சண்டிலா ஆகியோர்மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.
  • அதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த், சவாண் ஆகியோருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது
  • ஆனால், மேட்ச் பிக்சிங் வழக்கை விசாரித்த டில்லி நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று ஸ்ரீசாந்த் உள்பட 36 பேரை விடுதலை செய்தது.
  • ஆனால், பிசிசிஐ தான் விதித்த தடை உத்தரவை மாற்றிக்கொள்ள முடியாது என அறிவித்துவிட்டது. மேலும், குற்ற நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை இரண்டும் வெவ்வேறானவை. சம்பந்தப்பட்ட வீரர்களின் ஒழுங்கீனச் செயல்கள் குறித்து ஊழல் தடுப்புக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆயுள்காலத் தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று பிசிசிஐ விளக்கம் அளித்தது.
  • இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் ஸ்ரீசாந்த் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடையை நீக்கி கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகளிர் வீல்சேர் பேஸ்கட் பால்! வெண்கலம் வென்று இந்தியா சாதனை!
  • இந்தோனேசியாவில் நடைபெற்ற மகளிர் வீல்சேர் பேஸ்கர் பால் போட்டியில் முதன்முறையாக பங்கேற்ற இந்திய மகளிர் அணி வெண்கலம் பெற்று சாதனை படைத்துள்ளது.
  • மாற்றுத்திறனாளிகளுக்காக பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுவதுபோல, பாரா டிபிக்ஸ் போட்டிகளும் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த போட்டியில் ஊனமுற்ற பெண்கள் வீல்சேர் மூலம் பேஸ்கட் பால் விளையாடி சாதனை படைத்து வருகிறார்கள்.
  • இந்தோனேசியாவில் கடந்த மாதம் (ஜூலை) 28 முதல் 30, 2017 வரை நடைபெற்ற மகளிருக்கான 4 வது கோப்பை சர்வதேச மகளிர் வீல்சேர் பேஸ்கட் பால் போட்டி நடைபெற்றது.
  • இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக மகளிர் அணி பங்கு பெற்றது. அங்கு நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
  • இந்த போட்டியின்போது ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து அணியை வென்று, வெண்கலம் வென்றுள்ளது. இந்த அணியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம்12 வீராங்கனைகள் பங்கு பெற்றுள்ளனர்.
ஜிஎஸ்டி மத்திய அரசுக்கு முதல் மாத வசூல் ரூ. 42ஆயிரம் கோடி
  • நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியால் ஜூலை மாதத்தில் மட்டும் ரூ. 42ஆயிரம் கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் ஆயர்தீர்வையாக ( excise duty)ரூ. 31,782 கோடி வசூலானது. சேவை வரியாக 19,600 கோடி வசூலானது.
  • நடப்பாண்டு ஜூலை மாதத்தில் முதல்நாள் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. ஜூலை, மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என அரசு அறிவித்தது.
  • கடந்த வாரத்தில் இருந்து ஜி.எஸ்.டி. வரி ரிட்டனை தொழிற்சாலைகள், வர்த்தகர்கள், நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. இதில் இப்போது வரை முதல் மாதத்தில் 42 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
  • ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி(IGST)வரி மூலம், ரூ. 15 ஆயிரம் கோடியும், புகையிலை உள்ளிட்ட உடல் நலக்கேடு விளைவிக்கும் பொருட்களில் இருந்து ரூ. 5ஆயிரம் கோடியும் வரி வசூலாகியுள்ளது.
  • மத்திய ஜி.எஸ்.டி., மாநில ஜி.எஸ்.டி வரியாக ரூ.22 ஆயிரம்கோடி வரியாக வந்துள்ளது. தற்போது வரை 10லட்சம் பேர் வரிசெலுத்துபவர்கள் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். மேலும், 20 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.
  • கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆயத்தீர்வையாக ரூ.31 ஆயிரத்து 782 கோடியும், சேவை வரியாக ரூ.19 ஆயிரத்து 600 கோடியும் வசூலானது. இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரியோடு, மாநில அரசுகளின் வரியும் சேர்க்கப்படும் பட்சத்தில் வரிவசூல் அதிகரிக்கும். மேலும், 72 லட்சம் வரி செலுத்துபவர்களில் 50 லட்சம் பேர் ஜி.எஸ்.டி.க்கு மாறிவிட்டனர்.
  • 15 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர், ஒட்டுமொத்தமாக கணக்கிடும்போது, ஜூலை மாதத்தில் 60 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்கள், தொழில்நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதமும், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு ஜூலை மாதம் சுங்க வரி ரூ. 30000 கோடி வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ரஃபேல் நடால்.
  • 2017-ஆம் ஆண்டு சீசனில் பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் காலிறுதி வரை முன்னேறியதன் மூலம் மீண்டும் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
  • சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் நேற்று வெளியானது. இதன்படி நடால் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த பிரிட்டனின் ஆன்டி முர்ரே 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
  • ஸ்விட்சர்லாந்து வீரர்களான ரோஜர் ஃபெடரர் மூன்றாம் இடத்திலும், ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 4-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5-வது இடத்திலும் உள்ளனர்.
  • மகளிர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். ருமேனியாவின் சைமோனா ஹேலப் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார்.
  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்ற ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • உக்ரைனின் ஸ்விட்டோலினா 4-வத் இடத்திலும், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி 5-வது இடத்திலும் உள்ளனர்.
இனி ஆன்லைனிலேயே பாஸ்போர்ட் சரிபார்ப்பு!

  • ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் விசாரணையை மேற்கொள்வதற்கான பணிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
  • பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் குற்றப்பின்னணி போன்ற தகவல்களை போலீஸார் நேரடியாக சரிபார்த்த பின்னர், அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவது தற்போதைய நடைமுறையாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையால் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க, உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் (CCTNS) இணையதளத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களது தகவல்கள் சரிபார்க்கப்படும் நடைமுறை, அடுத்த ஓராண்டுக்குள் அமல்படுத்தப்பட இருப்பதாக உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி தெரிவித்துள்ளார். 
  • சிசிடிஎன்எஸ் இணையதளம், வெளியுறவுத் துறையின் பாஸ்போர்ட் சரிபார்ப்பு இணையதளத்துடன் இணைக்கப்பட்டு புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் சில மாநிலங்களில் இந்த நடைமுறை தற்போது அமலில் இருந்தாலும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பின்னர் பாஸ்போர்ட்டுக்காக நேரடியான போலீஸ் விசாரணை இருக்காது என்றும் அவர் கூறினார். 
2 குழந்தைகளுக்கு மேல் கூடாது: அசாமில் வருகிறது புதிய சட்டம்
  • பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை கட்டுப்படுத்தும் சட்டம் உட்பட, பல நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, அசாம் அரசு தெரிவித்துள்ளது. அதிரடி: அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. 
  • இங்கு, மக்கள் தொகை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை, மாநில அரசு எடுத்து வருகிறது. 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது' என, அதிரடியாக அறிவிக்கப்பட்டது. 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment