Monday, 8 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 8th JANUARY 2018

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு 'இயல்' விருது
  • கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதையும், வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும் எழுதி வரும் வண்ணதாசனுக்கு, 2017-ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 'இயல்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஜூன் மாதம் கனடாவில் நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும். ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய உலகின் ஆளுமைகளுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 'இயல்' விருது வழங்கி கௌரவித்துவருகிறது. எழுத்தாளர் அம்பை, எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர்.சுகுமாரன் உள்ளிட்டோர் இதற்கு முன் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். 
குறைந்த செலவில் கப்பல் மூலம் ஹஜ் பயணம் - இந்தியாவின் திட்டத்திற்கு சவுதி அரேபியா ஒப்புதல்
  • குறைந்த செலவில், கப்பல் மூலம் ஹஜ் பயணிகளை அனுப்பும் இந்தியாவின் திட்டத்திற்கு சவுதி அரேபியா ஒப்புதல் தெரிவித்து உள்ளது.
  • இந்தியா - சவுதி அரேபியா இடையே ஹஜ் பயணத்திற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது.
  • ‘‘இந்தியாவில் இருந்து கடல் வழியாக கப்பலில் ஹஜ் பயணிகளை அனுப்பும் திட்டத்திற்கு சவுதி அரேபியா கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
  • எனினும் இதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள், ஏற்பாடுகள் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேசி முடிவு செய்வார்கள்.
  • வரும் ஆண்டுகளில் கடல் வழி ஹஜ் பயணம் சாத்தியமாகும். கப்பல் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்வதால், பயண செலவு வெகுவாக குறையும்.இதன் மூலம் ஏழை, எளிய இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்.
  • மும்பையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு கப்பல் மூலம் ஹஜ் பயணம் செய்ய வசதியாக முன்பு கப்பல் இயக்கப்பட்டு வந்தது. எனினும் 1995-ம் ஆண்டிற்கு பின் இது நிறுத்திக் கொள்ளப்பட்டது.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் திண்டுக்கல்லில் கண்டுபிடிப்பு; முருகன், நந்தி, பைரவர் சிலைகளும் இருந்தன
  • "திண்டுக்கல் மாவட்டம், பாடியூரின் கிழக்கு பகுதியில் உள்ள எழுத்துப்பாறையில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதனருகே கி.பி. 13–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு சிதைந்த நிலையில் கிடந்தது. அது பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியனின் காலத்தை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • அந்தப் பகுதியில் இருந்த ஒரு சிவன் கோவில் பற்றியும், அந்த கோவிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் குறித்தும் அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தேவகன்மிகள் (கோவில் ஊழியர்கள்) மற்றும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் சிவன் கோவிலுக்கு நிலத்தை தானமாக அளித்து, அந்த நிலத்துக்கான குடிமை, கடமை வரி ஆகியவற்றை நீக்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தக் கோவிலுக்கு கணக்கு எழுதியவர் கூத்தாண்டனான தென்னவன் என்பதும் இந்த கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஊரைச் சேர்ந்த பலருடைய பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
  • அதில் அவேளான், கூத்தன், படிபுத்திரன், ஆறும்பாடியான் ஆகிய பெயர்கள் மட்டும் அழியாமல் தெளிவாக உள்ளது. மற்ற பெயர்கள் அழிந்துள்ளன. எழுத்துக்களை முழுமையாக படிக்க முடியாத அளவுக்கு அந்த கல்வெட்டு சிதைந்துள்ளதால், கோவில் பற்றிய முழுமையான விவரங்களை அறிய முடியவில்லை.
  • இந்த கல்வெட்டு மூலம் அது சிவன் கோவில் என்பதும், அதற்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் தெரிகிறது. கல்வெட்டின் அருகே இந்த நிலமும், கல்வெட்டும் சிவன் கோவிலுக்கு உரித்தானது என்பதற்கு அடையாளமான ஒரு திரிசூல சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • எழுத்துப்பாறையின் மேற்கு புறம் மேற்கொண்ட ஆய்வில் சிவன் கோவிலின் சிதிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் முருகன், நந்தி மற்றும் பைரவர் ஆகிய சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முருகன் சிலையின் கைப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது.
  • இந்த சிதிலங்கள் மூலம் இந்த கோவில் மரக்கட்டைகள் மற்றும் செங்கல் கொண்டு கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால்தான் கோவிலில் கல்வெட்டை பொறிக்க இயலாமல் அருகில் இருந்த பாறையில் பொறித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment