Saturday, 6 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 6th JANUARY 2018

ஜனவரி 14 ஆம் தேதியை பொங்கல் தினமாக அறிவித்து பெருமைப்படுத்திய வர்ஜீனியா 
  • உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வர்ஜீனியாவில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான செய்தியை வர்ஜீனியா பொதுச் சபை அறிவித்துள்ளது.
  • உலகத்தின் மிகப்பழமையான ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றும் தொடர்ந்து இயங்கி வரும் சட்டசபை என்ற பெருமை உடைய வர்ஜீனியா பொதுச்சபையில் ஜனநாயகக்கட்சி, பிரதிநிதி டேவிட் புலோவா, பொங்கல் திருநாளை அங்கீகரிப்பது தொடர்பாக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில காவல்துறை டி.ஜி.பி., ஐ.ஜி.க்கள் மாநாடு: மோடி பங்கேற்பு
  • மத்திய பிரதேச மாநிலத்தில் மாநிலங்களின் டி.ஜி.பி. ஐ.ஜி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் இன்று நடக்க உள்ள இரண்டு நாள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார்.
  • உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு தொடர்பாக மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்களின் ஆண்டு மாநாடு, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள டெஹாங்பூர் எல்லை பாதுகாப்புபடை அகடாமியில் இன்று துவங்குகிறது. 
  • இன்றும் நாளையும் (7,8) நடக்க மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பை பலப்படுத்த மேற்கொள்ளபட வேண்டிய நடவடிக்கைகள் எல்லை தாண்டிய பயங்கரவாத ஊடுருவலை தடுப்பது, காவல்த்துறையில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
  • இது போன்று முதல் மாநாடு அசாமின் கவுகாத்தியில் உள்ள டோஹர்டோவிலும், 2015-ம ஆண்டு குஜராத்தின் கட்ச் நகரிலும், 2016-ம் ஆண்டு ஆந்திராவின் தெலுங்கானாவிலும் நடந்தது.
நுகர்வோரை ஏமாற்றும் விளம்பரங்களில் நடித்தால் அபராதம்: புதிய மசோதா
  • பொதுமக்களை ஏமாற்றும் வகையில் தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 3 ஆண்டு தடை செய்தும், அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும், தவறான விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகி இருந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் விளம்பரங்களில் ஈடுபடக்கூடாது என்றும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறந்ததாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு
  • இதில் முதல் முன்று இடங்களில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுட்டா, உ.பி. மாநிலத்தில் உள்ள குட்டம்பா, தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் ஆகிய காவல் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.
  • கான்பூரில் நடைபெற்ற காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருது வழங்கினார். விருதினை ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளர் ஜோதி பெற்று கொண்டார்.
நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமான வளர்ச்சி 8.3% குறையும்: மத்திய புள்ளியியல் அலுவலகம் கணிப்பு
  • இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டான 2017-18-ல் தனிநபர் வருமான வளர்ச்சிவிகிதம் 8.3 சதவீதம் குறையும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. 
  • தனிநபர் ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 782 என்ற அளவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 2016-17 நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 219 ஆக இருந்தது என்றும் வளர்ச்சி விகிதம் 9.7 சதவீதமாக இருந்தது என்றம் மத்திய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.
  • தனிநபர் வருமானம் வளர்ச்சி விகிதம் 2017-18-ம் ஆண்டில் 5.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது, முந்தைய ஆண்டில் இது 5.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2017-18 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சிவிகிதம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாக 6.5 சதவிகிதமாக இருக்கும். 
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி விகிதம், 2016-17-ல் 7.1 சதவீதமாகவும், முந்தைய ஆண்டில் 8 சதவீதமாகவும் இருந்தது. இது 2014-15-ம் ஆண்டில் 7.5 சதவீதமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சரிவுக்கு விவசாயம் மற்றும் உற்பத்தி துறைகளின் மோசமான செயல்பாடுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
கேரம் சாம்பியன்ஷிப்: இரு பிரிவுகளில் தமிழக சிறுமிகள் சாம்பியன் வென்று அசத்தல்
  • 44-வது தேசிய சப்-ஜூனியர் மற்றும் மாநிலங்கள் இடையேயான கேரம் 
  • சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக சிறுமிகள் இரு பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
  • 44-வது தேசிய சப்-ஜூனியர் மற்றும் மாநிலங்கள் இடையேயான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் மும்பையில் நடைப்பெற்றது.
  • இதில் கேடட் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கஸிமா (12) தன்னை எதிர்த்து போட்டியிட்ட சக மாநிலத்தவரான அபிராமியை 21-0, 21-0 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தி சாம்பியன் வென்றார்.
  • இதையடுத்து, அபிராமி 2-ஆம் இடத்தையும், உத்தரப் பிரதேசத்தின் ரிஷிதா கேஷ்ரி 3-ஆம் இடத்தையும் பிடித்தனர்.
  • அதேபோல், சப்-ஜூனியர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் ராதிகா (14), 15-2, 20-2 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தின் ஷ்ருதி சோனாவேனை வீழ்த்தினார்.
  • இந்தப் பிரிவில் ஷ்ருதி 2-ஆம் இடத்தையும், உத்தரப் பிரதேசத்தின் மன்தாஷா இக்பால் 3-ஆம் இடத்தையும் பிடித்தனர்.
  • கேடட் சிறுவர்கள் பிரிவில் உத்தரப் பிரதேசத்தின் கிருஷ்ணதயாள் யாதவ் 21-2, 8-14, 21-7 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தின் நிலன்ஷ் சிப்லுன்கரை வென்றார்.
  • இந்தப் பிரிவில் நிலன்ஷ் சிப்லுன்கரை இரண்டாம் இடத்தையும், விதர்பாவின் சூரஜ் கெய்க்வாட் 3-ஆம் இடத்தையும் பிடித்தார்.
  • அதேபோன்று சப்-ஜூனியர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டெல்லியின் முகமது அரீப் 9-7, 13-18, 21-0 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தின் ஓம் தவாரேவை வென்றார்.
  • இந்தப் பிரிவில் ஓம் தவாரேவை 2-ஆம் இடத்தையும், அஸ்ஸாமின் வாகிப் இக்பால் ஹுசைன் 3-ஆம் இடத்தையும் பிடித்தனர்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment