Wednesday, 10 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 10th JANUARY 2018

சிங்கிள் பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சத அந்நிய முதலீடு : அமைச்சரவை ஒப்புதல்
  • சிங்கிள் பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அமைச்சரவைக் கூட்டம் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. 
  • இக்கூட்டத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அந்நிய முதலீட்டையும் ஊக்குவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் பிராண்டுகளில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள்
  • மத்திய அரசின் அனுமதி பெற்று 49 சதவீத அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு செய்ய நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இனிமேல் அரசின் அனுமதியின்றி, 100 சதவீத அளவிற்கும் இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு செய்ய முடியும். 
  • ஏர் இந்தியா ஏர் இந்தியா நிறுவனத்தில்,முதலீடு செய்யும் நிறுவனங்களில் வெளிநாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே 49 சதவீதத்திற்கு அதிகமாக முதலீடு இருக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
  • இதுமட்டுமின்றி கட்டுமான மேம்பாட்டு நிறுவனங்களிலும் மத்திய அரசின் ஒப்புதலின்றி, 100 சதவீத அளவிற்கு, அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எளிமையாக தொழில் செய்யவும், அந்நிய முதலீடு அதிகரிக்கவும் அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி கே. சிவன் நியமனம்
  • தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக உள்ள ஏ.எஸ். கிரண் குமாரின் பதவி காலம் நாளையுடன் (மூன்றாண்டு) முடிவடைகிறது. இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவரை நியமிக்க நியமன கமிட்டி அமைக்கபட்டது. 
  • இந்நிலையில், இஸ்ரோ புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே. சிவன் நியமனத்திற்கு கேபினட் நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதயனைடுத்து கே. சிவனை இஸ்ரோ புதிய தலைவராக நியமித்தது மத்திய அரசு
தேசிய, சர்வதேச பாய்மர படகுப் போட்டி: வேலூர் மாணவருக்கு தங்கப்பதக்கம்
  • ஆந்திராவில் நடைபெற்ற தேசிய, சர்வதேச அளவிலான பாய்மர படகுப் போட்டியில் வேலூர் மாணவர் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு ஆட்சியர் 
  • எஸ்.ஏ.ராமன் பாராட்டுத் தெரிவித்தார்.
  • ஆந்திர மாநிலம், நெல்லூர் கிருஷ்ணப்பட்டனம் துறைமுகத்தில் தேசிய அளவிலான பாய்மர படகுப் போட்டிகள் கடந்த டிசம்பர் 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 300 வீரர்கள் கலந்து கொண்டனர். 
  • இதில், சீனியர் பிரிவு போட்டியில் வேலூரைச் சேர்ந்த விஷ்ணு (18) தங்கப்பதக்கம் வென்றார். மேலும், சீனியர் பிரிவில் மிகக்குறைந்த வயதில் தங்கப்பதக்கம் வென்றவர் என்ற புதிய சாதனையும் படைத்துள்ளார்.
  • இதன் தொடர்ச்சியாக, சர்வதேச பாய்மர படகுப் போட்டிகள் அதே துறைமுகத்தில் கடந்த டிசம்பர் 27 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றன. 12 நாடுகளைச் சேர்ந்த 60 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில் 21 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவிலும் மாணவர் விஷ்ணு தங்கப்பதக்கம் வென்றார். 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment