Thursday, 4 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 4th JANUARY 2018

சாதி மறுப்பு திருமணத்திற்கு ரூ.5 லட்சம் உதவி - மத்திய அரசு
  • இந்த ஆணவக் கொலைகளை தடுக்க இன்னும் தமிழக அரசும், மத்திய அரசும் முயன்று கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் சாதி மறுப்பு திருமணங்களை அதிகரிக்க மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்து இருக்கிறது.
  • அதன்படி சாதி இல்லாமல், இல்லையெனில் சாதி மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. 5 லட்சம் ரூபாய் வரை இதற்காக உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவிகளை நிறுத்திய அமெரிக்கா
  • பாகிஸ்தானிற்கு, அளிக்கப்பட்டு வந்த, பாதுகாப்பு உதவிகளை கிட்டத்தட்ட முழுவதுமாக நிறுத்துகிறது அமெரிக்கா. அந்நாட்டில் செயல்பட்டு வரும், பயங்கரவாத குழுக்களை சரியாக கையாள தவறியதே இதற்கு காரணம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  • ஆஃப்கான் தாலிபான் மற்றும் ஹக்குவனி குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரையில், இந்தத் தடை தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
  • 255 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை பாகிஸ்தானிற்கு அனுப்புவதில், அமெரிக்கா ஏற்கனவே காலம் தாழ்த்தியது.
விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
  • தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு 3 வருவாய் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 426 சதுர கி.மீ. பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கி சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 
  • மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் முதற்கட்டமாக தமிழகத்திலுள்ள 21 மாவட்டங்களைச் சேர்ந்த 43 வட்டங்களுக்குரிய 24.11 லட்சம் கணினிப்படுத்தப்பட்ட நில அளவை புல வரைபடங்களை http.//eservices.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணையவழி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் டைபாய்ட் தடுப்பூசி : உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்
  • ஐதராபாத் நகர மருந்து நிறுவனம் கண்டுபிடித்த டைபாய்ட் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது.
  • இதற்கு தடுப்பு மருந்தாக உலக சுகாதார நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மருந்தை அங்கீகரித்து இருந்தது, தற்போது இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் உள்ள பாரத் பயோ டெக் என்னும் நிறுவனம் டைபாய்ட் கான்சுகேட் வாசின் என்னும் தடுப்பு மருந்தை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து ஊசி வடிவில் வருகிறது. இந்த மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.
  • இந்த தடுப்பூசி ஆறு மாதக் குழந்தைகள் முதல் வயதானவர் வரை உபயோகப்படுத்தலாம் எனவும் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2001 முதல் இந்த தடுப்பூசி பல நிலைகளில் பரிசோதிக்கப்பட்டு தற்போது அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம் இனி இந்த தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் உபயோகப் படுத்த முடியும். இதன் மூலம் டைபாய்ட் காய்ச்சல் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
12 வருடங்களில் 100000 வழக்குகளை விசாரித்த நீதிபதி
  • ஆந்திர ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதி ஒருவர் 12 ஆண்டுகளில் 1 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளார்.
  • ஆந்திர மாநிலம் அலகாபாத்தில் உள்ள உயர்நீதி மன்றத்தில் பணியாற்றி வருபவர் சுதிர் அகர்வால். மூத்த நீதிபதியான இவர் கடந்த 12 ஆண்டுகளில் 1லட்சம் வழக்குகளை விசாரணை செய்துள்ளார். இது ஐதராபாத் வரலாற்றில் சாதனை என்று கூறப்படுகிறது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment