Wednesday, 3 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 2nd JANUARY 2018

பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி: அறிக்கையை வெளியிட்டது மத்திய அரசு
  • அரசியல் கட்சிகள் ஒருவரிடமிருந்து ரூ.2,000 வரை மட்டுமே ரொக்கமாக பெற அனுமதிக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். 
  • அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை வெளிப்படையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்கான பிரத்யேக பத்திரங்களை வெளியிடுவது தொடர்பான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.
  • இதில் அரசியல் கட்சிகளுக்கு தனி நபர்களும் நிறுவனங்களும் நிதி தருவதை வெளிப்படையாக்குவது தொடர்பான நடைமுறைகள் இடம்பெற்றுள்ளது. 
  • இதன்படி கட்சிகளுக்கான நன்கொடைகள் பத்திரங்கள் மூலமாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் இப்பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டும் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஆயிரம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான பத்திரங்கள் வங்கிகளில் விற்கப்படும். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வெளியான நிலையில் பத்திரங்கள் மூலம் நிதி தரும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. 
ரத்ததானம் செய்தால் சம்பளத்துடன் விடுமுறை: மத்திய அரசு அதிரடி
  • தற்போது ரத்த தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகின்றது. ஆனால் ரத்தத்தின் உட்பிரிவுகளை தானமாக வழங்குபவர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுவது இல்லை.
  • ரத்த தானம் அல்லது சிகப்பணுக்கள், பிளாஸ்மா, ரத்தவட்டுக்கள் உள்ளிட்டவற்றை தானமாக வழங்குபவர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • உரிமம் பெற்ற ரத்த வங்கிகளில் வேலைநாட்களில் ரத்ததானம் செய்ய வேண்டும். ஆண்டிற்கு நான்கு முறை இந்த சிறப்பு சாதாரண விடுப்பை எடுக்கலாம் 
கடந்தாண்டை விட 2000 கோடி அதிகம் லாபம் ஈட்டிய IRCTC
  • இந்திய இரயில்வே கடந்தாண்டை விட கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய் வருவாய் லாபம் ஈட்டியுள்ளது! இந்தியன் ரயில்வே ஏற்கனவே காகிதமற்ற டிக்கெட் முறையினை அறிமுகப் படுத்தியுள்ளது. 
'மின்னாளுமைக் கொள்கை 2017'-யை முதல்வர் வெளியிட்டார்
  • அரசுத் துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அவர்களின் இருப்பிடத்தின் அருகிலேயே அரசின் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. 
  • இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள 'மின்னாளுமைக் கொள்கை 2017' -யை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். 
  • முக்கிய அம்சங்கள்: இந்த மின்னாளுமை கொள்கையின் மூலமாக, 2023-ஆம் ஆண்டுக்குள் அரசின் சேவைகள் அனைத்தையும் இணையத்தின் வாயிலாக வழங்குதல், பொது சேவை மையங்கள் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் அரசின் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நம்பகத் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும்.
  • மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் அரசுத் துறைகள் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், கணினி பராமரிப்பு செலவினமும் குறையும்.
  • அரசுத் துறைகள் தங்களது ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் முதல் கட்டமாக 0.5 சதவீதத்தை மின்னாளுமைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யவும், பின் படிப்படியாக அதை 5 ஆண்டுகளுக்குள் 3 சதவீதமாக அதிகரிக்கவும் மின்னாளுமை கொள்கை வழிவகுக்கும் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
2 ஆண்டுகள் தாய்ப்பால் கட்டாயம்: சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி
  • குழந்தைக்கும் தாய்ப்பால் மிகவும் அத்தியாவசியமானது என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வை அனைத்து தாய்மார்களுக்கும் அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பேறுகால விடுப்பு எடுத்த பெண் ஒருவருக்கு பேறுகால விடுமுறையை பணி நாளாக கணக்கில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டது
  • மேலும் அந்த பெண் மேல்படிப்பு படிக்க விரும்பியதால் உடனடியாக அவரை மேற்படிப்பில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டார். 
  • அதுமட்டுமின்றி 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் வழங்குவதை அரசு கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும் என்றும் இதுகுறித்து ஜனவரி 22-ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பறை வசதி அவசியம்: வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவு
  • தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கிய அம்சமாக கழிப்பறைகள் அமைப்பதை மத்திய அரசு விரைவுபடுத்தி வருகிறது. குறிப்பாக கிராமங்களில் திறந்தவெளியில் கழிப்பதை தடுக்கும் வகையில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 
  • இந்நிலையில் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் 21 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இவற்றுக்கு 1.25 லட்சம் கிளைகள் இருக்கின்றன. 
  • இதுபோல் 6 பொத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இந்த வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான கழிப்பறை வசதியை அளிக்க வேண்டும். 
உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • ஜம்மு - காஷ்மீரிலும், நக்சல் பாதிக்கப்பட்ட மாநிலங்களிலும், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான செலவினங்களுக்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.
  • போலீஸ் படைகளை நவீனப்படுத்தும் நோக்கில் உருவான திட்டத்துக்கு, 2017 - 2020 ஆண்டுகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. போலீஸ் படைகளுக்கு நவீன ஆயுதம் வாங்குதல், வாகனங்கள் வாங்குதல், பெண்கள் பாதுகாப்பு உட்பட, சட்டம் - ஒழுங்கு மேம்பாட்டுக்காக, சிறப்பு திட்டங்கள் வகுத்தல் ஆகியவை, இத்திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.
  • இத்திட்டத்தில், ஜம்மு - காஷ்மீரிலும், நக்சல் பாதிப்பு உள்ள மாநிலங்களிலும், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான செலவினங்களுக்கு, 10,132 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது. இதில், 3,000 கோடி ரூபாய், நக்சலைட்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அளிக்கப்படும். 
  • வட கிழக்கு மாநிலங்களில், போலீஸ் படை மேம்பாட்டுக்காக, 1,215 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பெண்களுக்காக மத்திய அரசின் புதிய இணைய தளம் அறிமுகம் அனைத்து திட்டங்களையும் ஒரே தளத்தில் பார்க்கலாம்
  • பெண்களுக்கான அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை ஒரே தளத்தில் பார்க்க, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை புதிய பிரத்யேக இணைய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதில் பெண்கள் நலம் பெறும் வகையிலான முக்கியத் தகவல்கள் அடங்கிய சுமார் 350 திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இதன் முகப்புப் பக்கத்தில் பெண்கள் வயது அடிப்படையில் 4 பிரிவினராகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வயது, மாநிலம், எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறது என்ற தேர்வுகளின் அடிப்படையில் உதவிகள் வழங்கப்படுகின்றன.
  • இணையதளத்தில் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் வழங்கும் திட்டங்களுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.அத்துடன் குறை தீர்க்கும் பகுதியும் தொடங்கப்பட்டுள்ளது.
  • வன்முறைகள், சைபர் குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த வழிமுறைகளும் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இலவச சட்ட உதவி பெறுவது குறித்தும், மாநிலங்களில் உள்ள பெண்கள் உதவி எண்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது. பெண்களின் வேலைவாய்ப்புக்கான தேடலும் இதில் உள்ளது. நேர்காணல்கள், முதலீடு, சேமிப்பு ஆகியவை குறித்த அறிவுரைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • பொதுவான நலத்திட்டங்கள் தாண்டி, ஊட்டச் சத்துக்கான குறிப்புகள், உடல் பரிசோதனைக்கான பரிந்துரைகள், ஆபத்தான நோய்கள் குறித்த தகவல்கள் ஆகியவையும் இதில் அடக்கம்.
  • இவை தவிர வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி, வங்கிக் கணக்கைத் தொடங்கும் வழிமுறைகள், பாஸ்போர்ட் பெறுவது ஆகியவை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்
  • மாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
  • அனைத்து மாநில அரசுகளுக்கும் இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது 
மருத்துவ ஆணைய மசோதா நிறுத்தி வைப்பு
  • டாக்டர்கள் கடும் எதிர்ப்பை அடுத்து மருத்துவ ஆணைய மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு மசோதாவை அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் மக்களவையில் அறிவிப்பை வெளியிட்டார்.
தேசிய துப்பாக்கி சுடுதல்: சிறந்த வீரர்களாக அரியாணா, மே.வங்க வீரர்கள் தேர்வு
  • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியாணாவின் மானு பேகர், மேற்கு வங்கத்தின் மெஹுலி கோஷ் சிறந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
  • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிஸ்டல் பிரிவில் மானு பேகர் 11 தங்கங்கள், 3 வெள்ளிகள், ஒரு வெண்கலம் என 15 பதக்கங்கள் வென்றார்.
  • மெஹுலி கோஷ் ரைஃபிள் சுடுதல் பிரிவில் 8 தங்கங்கள், 3 வெண்கலங்கள் என 11 பதக்கங்கள் கைப்பற்றினார். ஒட்டுமொத்த சாம்பியனாக அரியாணா மாநிலம் தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதேபோன்று தனிநபர் பிரிவில் அரியாணா 10 தங்கங்கள், 3 வெள்ளிகள், 4 வெண்கலங்கள் என 17 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
  • பஞ்சாப் 4 தங்கங்கள், 3 வெள்ளிகள், 4 வெண்கலங்கள் என 11 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.
  • அணிகள் பிரிவில் 24 தங்கங்கள், 21 வெள்ளிகள், 15 வெண்கலங்கள் என 60 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது அரியாணா.
  • பஞ்சாப் மாநிலம் 18 தங்கங்கள், 12 வெள்ளிகள், 15 வெண்கலப் பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.
  • இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 3388 வீரர்களும், 1520 வீராங்கனைகளும் பங்கேற்றனர். அவர்களுடன் பாரா வீரர், வீராங்கனைகளும் பங்கேற்ற இப்போட்டியில் மொத்தம் 778 பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment