Wednesday, 10 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 9th JANUARY 2018

ஏப்., - டிச., வரையிலான காலத்தில் நேரடி வரி வசூல் 18.2 சதவீதம் உயர்வு
  • நடப்பு, 2017 - 18ம் நிதி­யாண்­டின், ஏப்., - டிச., வரை­யி­லான, ஒன்­பது மாதங்­களில், நேரடி வரி வரு­வாய், நிகர அள­வில், 18.2 சத­வீ­தம் அதி­க­ரித்து, 6.56 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
  • இது, மத்­திய பட்­ஜெட் இலக்கு அள­வான, 9.80 லட்­சம் கோடி ரூபா­யில், 67 சத­வீ­த­மா­கும்.இதே காலத்­தில், மொத்த நேரடி வரி வரு­வாய், 12.6 சத­வீ­தம் அதி­க­ரித்து, 7.68 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. 
  • மதிப்­பீட்டு காலத்­தில், கூடு­தல் வரி செலுத்­தி­யோ­ருக்கு, 1.12 லட்­சம் கோடி ரூபாய் திரும்ப அளிக்­கப்­பட்டு உள்­ளது.முன்­கூட்­டிய வரி வரு­வாய், 12.7 சத­வீ­தம் உயர்ந்து, 3.18 லட்­சம் கோடி ரூபா­யாக ஏற்­றம் கண்­டுள்­ளது.
  • இதில், நிறு­வ­னங்­கள் மற்­றும் தனி­ந­பர் வாயி­லான வசூல் வளர்ச்சி, முறையே, 10.9 சத­வீ­தம் மற்­றும் 21.6 சத­வீ­த­மாக உள்­ளது.நேரடி வரி விதிப்­பின் கீழ், தனி­ந­பர் வரு­மான வரி, செல்வ வரி, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் வரி ஆகி­யவை அடங்கி உள்ளன.நடப்பு நான்­காம் காலாண்­டில், பட்­ஜெட் இலக்கை எட்ட, இன்­னும், 3.24 லட்­சம் கோடி ரூபாய் நேரடி வரி வசூ­லிக்­கப்­பட வேண்­டும்.

மிகச் சிறிய தக்காளி - இஸ்ரேல் சாதனை
  • இஸ்ரேல் நாட்டில் மிகச் சிறிய தக்காளியை, அந்நாட்டு விவசாய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.தண்ணீர் வசதி மிக குறைவாக உள்ள இஸ்ரேல், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. 
  • இதன் மூலம் விவசாய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் அந்நாடு சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, காய்கறிகள் மற்றும் பழங்களை நவீன சாகுபடியில் விளைவித்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக தக்காளியை மிக சிறிய வடிவியில் அந்நாடு ஏற்கனவே உருவாக்கியுள்ளது. 
  • செர்ரி தக்காளி என அழைக்கப்படும் இந்த தக்காளி அதிக சிவப்பு நிறத்துடன், சிறியதாக இருக்கும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை செர்ரி தக்காளிகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.
  • இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சி நிறுவனமான கேடமாக, இதுவரை இல்லாத அளவு மிகச் சிறிய அளவிலான செர்ரி தக்காளியை உருவாக்கியுள்ளது. தண்ணீர் துளி அளவு கொண்ட இந்த தக்காளி, பார்ப்பதற்கு மிக அழகாகவும், சிவப்பு நிறத்துடனும் காட்சி அளிக்கிறது. 
  • தக்காளியை சமைக்காமல் சாப்பிட ஏதுவாக இந்த வகை சிறிய தக்காளி உருவாக்கப்பட்டுள்ளது. வாயில் போட்டுக்கொள்ளும் வகையில் இது உள்ளது. மேலும், வாயில் வைத்து கடிக்க ஏதுவாக சிறிதாக இருப்பதால் அதனுள் இருக்கும் சாறு வீணாகாது.
  • தக்காளி சாலெட் சாப்பிடுபவர்களுக்கு இது வசதியாக இருக்கும், எனக் கூறினார்.இந்த சிறிய ரக தக்காளிகள், சிவப்பு நிறத்தில் மட்டுமின்றி மஞ்சள் உட்பட பிற நிறங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் இந்த மாதம் நடைபெறும் விவசாயக் கண்காட்சியில் இந்த புதிய வகை தக்காளிகள் இடம் பெறவுள்ளன.
இந்தியாவின் முதல் பெண் ஊழியர்களின் ரயில் நிலையம்: லிம்கா புத்தகத்தில் சாதனை
  • பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக புகழ் பெற்று வரும் நிலையில் இந்தியாவில் முதன்முதலில் முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் ரயில்நிலையம் என்ற பெருமையை மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மட்டுங்கா என்ற புறநகர் ரயில்நிலையம் பெற்றுள்ளது.
  • கடந்த ஜூலை மாதம் முதல் இந்த ரயில் நிலையத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ரயில்வே காவலர்கள், சிக்னல் பிரிவு ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என அனைத்து துறைகளிலும் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இந்த ரயில் நிலையத்தில் பணியாற்றுகின்றனர்.
  • மொத்தம் 41 பெண் ஊழியர்கள் பணியாற்றும் இந்த ரயில் நிலையம் தற்போது லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகள் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர்

இந்தியாவின் 100வது செயற்கைகோள்.12ம் தேதி இஸ்ரோ ஏவுகிறது
  • இந்தியாவின் 100வது செயற்கோளை வரும் 12ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
  • பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ் 1ஹெச் செயற்கைகோள் தோல்வியில் முடிந்தது.
  • இதை தொடர்ந்து அடுத்த முயற்சியாக 31 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் மூலம் கர்நாடகா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து வரும் 12ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
  • இதில் 28 செயற்கைகோள்கள் வெளிநாடுகளை சேர்ந்தது. இந்தியாவின் 3 செயற்கைகோள்களும் ஏவப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் 100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கவுள்ளது.

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்
  • திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. 
  • இந்த நிலையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. 
  • "தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க 12 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு வழிமுறைகளை உருவாக்க 6 மாதங்களாகும். அதுவரை தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என்பதை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
  • தேசிய கீதம் தொடர்பான பொதுநலன் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, 'தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு உரிய மரியாதை கொடுக்கவேண்டும். அதனால், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கவேண்டிய கட்டாயமில்லை' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட அமைச்சரவைக் குழு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment