Type Here to Get Search Results !

குரூப் 4 தேர்வு: 21.36 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

  • குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு 21.36 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில், ஆண்களை விட 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
  • இளநிலை உதவியாளர் உள்பட குரூப் 4 தொகுதி மற்றும் வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்கள் 9 ஆயிரத்து 351 உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (டிச.20) கடைசி நாளாகும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வியாழக்கிழமை (டிச.21) கடைசி.
  • 20.83 லட்சம் விண்ணப்பங்கள்: தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், 20.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 13 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு, டிச. 20 ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.நீட்டிக்கப்பட்ட காலத்தில் மட்டும் 2.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 
  • இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21.36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தேர்வாணைய வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
  • கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் கூடுதலாக 9 ஆயிரத்து 40 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
  • பெண்களே அதிகம்: தேர்வுக்கு 11.34 லட்சம் பெண் விண்ணப்பதாரர்களும், 9.48 லட்சம் ஆண் விண்ணப்பதாரர்களும், 54 மூன்றாம் பாலினத்தவரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த அனைவரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) "APPLICATION STATUS என்ற இணைப்பினை கிளிக் செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel