Type Here to Get Search Results !

TNPSC VAO GROUP 4 ONLINE TEST 14 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 14

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.

UNIT - VIII :  History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)


* தமிழில் ஓரெழுத்து ஒருமொழி 42 உள்ளன.
* பகுத்தல் என்பதன் பொருள் பிரித்தல்
* பதம் இரு வகைப்படும். பிரிக்கவியலாத சொல் பகாப்பதம், பகுக்க இயலும் சொற்கள் பகுபதம் என்பர்.
* பகாப்பதம் நான் வகைப்படும்.
* பகுப்பதம் இரு வகைப்படும்.
* பகுபத உறுப்புகள் ஆறு.
* பகுபதத்தில் அவசியம் இருக்க வேண்டியவை பகுதி, விகுதி
* இடைச்சொற்கள் பகாப்பதம் ஆகும்.
* ஏவல் வினையாக அமைவது வினைப் பகுபதம் ஆகும்.
* கண்டிலன் என்பதில் அமைந்துள்ள இடைநிலை - இல்.
* பெயர் பகுபதம் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறன் அடியாகத் தோன்றும்.
* காலம் காட்டும் இடைநிலைகள் மூன்று.
* வழக்கு என்பதை மரபு என்றும் கூறுவர். வழக்கு இரு வகைப்படும்.
* இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். இல்முன் என்பதை முன்றில் எனக் கூறுவது.
இலக்கணப்போலி
* இறந்தவரைத் துஞ்சினார் (இறைவனடி சேர்ந்தார்) என்பது மங்கல வழக்கு.
* தஞ்சாவூரைத் தஞ்சை என வழங்குவது மரூஉ
* விளக்கைக் குளிரவை என்பது மங்கல வழக்கு.
* கள்ளைச் சொல் விளம்பி என்று கூறுவது குமூஉக்குறி
* கால்கழுவி வந்தேன் என்று கூறுவது இடக்கரக்கடல்
* காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை
* தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும்.
மல்லிகைப் பூ - என்பதில் மல்லிகை என்பது சிறப்புப் பெயர். பூ என்பது பொதுப்பெயர்.
வளப்பிறை என்பது வினைத்தொகை. செம்மொழி என்பது பண்புத்தொகை
கயல்விழி என்பது உவமைத்தொகை. மா, பலா, வழை என்பது உம்மைத்தொகை.
பவளவாய் பேசினாள் என்பது அன்மொழித்தொகை.
* முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள் ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை
* தொகாநிலைத்தொடர் ஒன்பது வகைப்படும்.
* மற்றுப்பிற என்னும் தொடரில் "மற்று" என்பது இடைச்சொல்
* சாலப்பகிர்ந்து என்பது உரிச்சொல் தொடர். கூடிப் பேசினார் என்னும் தொடர் பெயரெச்சத்தொடர் ஆகும்.
* கண்ணா வா! விளித்தொடர். வந்தான் இராமன்-வினைமுற்று தொடர். உடைந்த நாற்காலி பெயரெச்சத் தொடர். வந்து நின்றான் - வினையெச்சத் தொடர், கபிலன் வந்தான் - எழுவாய்த் தொடர், வீட்டை கட்டினான்-வேற்றுமைத்தொகாநிலைத் தொடர்.
* ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.
* சினையின் பெயர் முதலுக்கு ஆகிவருவதை சினை ஆகு பெயர்.
* முதல் பொருளின் பெயர் சினைக்கு ஆகி வருவதை பொருளாகு பெயர் (முதலாகு பெயர்) என்று கூறுவர்.
* ஊர் திரண்டது என்னும் தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் - இடவாகு பெயர்.
* வெற்றிலை நட்டான் என்னும் தொடர் சினையாகு பெயர்.
* இடத்தின் பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர்.
* காலப்பெயர் அக்காலத்தோடு தொடர்புடைய வேறஉ ஒரு பொருளுக்கு ஆகிவருவது காலவாகு பெயர். எ.கா. டிசம்பர் பூ.
* செவலையை வண்டியில் பூட்டு என்னும் தொடர் பண்பாகு பெயர்.
* பண்பாகு பெயரை குணவாகு பெயர் எனவும் வழங்குவர் (நீலம் சூடினாள்).
* வறுவல் தின்றான் என்பது தொழிலாகு பெயர். தொழில் பெயர் தொழிலைக் குறிக்காமல் அத்தொழிலால் ஆகும் உணவைக் குறிப்பது தொழிலாகு பெயர்.
* அளவைக் குறிக்கும் பெயர்களை அளவைப்பெயர்கள் என்பர்.
* அளவைப்பெயர்கள் நான்கு வகைப்படும்.
* எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய பொருளுக்கு பெயராகி வருவது எண்ணலளவை ஆகுபெயர். (ஒன்றஉ பெற்றால் ஒளிமயம்)
* எடுத்தல் அளவைப் பெயர். அவ்வளவைக் குறிக்காமல் அவ்வளவுடைய பொருளுக்கு (அரிசி, பருப்பு) ஆகி வருவது எடுத்தலளவை ஆகுபெயர். (ஐந்து கிலோ என்ன விலை)
* முகத்தில் அளவைப் பெயர். அவ்வளடைய பொருளுக்கு பெயராகி வருவது முகத்தலளவை ஆகுப்பெயர். (நான்கு லிட்டர் கொடு)
* நீட்டல் அளவை பெயருக்குச் சான்று மூன்று மீட்டர் கொடு.
* வள்ளுவர் சொல் வாழ்க்கைக்கு இனிது இத்தொடர் சொல்லாகு பெயர்.
* தயிரை இறக்கு இத்தொடர் தானியாகு பெயர்.
* தானம் தானிக்கு ஆகி வருவது இடவாகு பெயர்.
* தானி (பொருள்) தானிகு ஆகி வருவது கருவியாகு பெயர்.
* கருவிப்பொருள் காரியத்திற்கு ஆகி வருவது கருவியாகு பெயர்.
* காரியப் பொருள் கருவிக்கு ஆகி வருவது காரியவாகு பெயர் (எ.கா. வீணைகேட்டு மெய்ம் மறந்தேன்)
* திருவள்ளுவரைப் படித்துப்பார். இத்தொடர் கருத்தாவாகு பெயர்.
* நாரதர் வருகிறார். இத்தொடர் உவமையாகு பெயர்.
* ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகுபெயரே. வழாநிலை, வழு, வழுவமைதி
* இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும், எழுதுவதும் வழாநிலை. வழாநிலை அறுவகைப்படும்.
* அரசன் வந்தான், மாடு வந்தது - திணை வழா நிலை
* கண்ணன் வந்தான், நாய் ஓடியது - பால் வழா நிலை
* நான் வந்தேன் , நீ வருவாய் - இடவழா நிலை
* நாளே வருவேன், நேற்றுப் படித்தேன் - கால வழா நிலை
* தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் - வினா வழா நிலை
* தமிழ்நாட்டின் தலைநகரம் எது? என்னும் வினாவிற்கு சென்னை என விடையளித்தல் - விடை வழா நிலை.
* இலக்கண முறையின்றிப் பேசுவதும், எழுதுவதும் வழு எனப்படும். வழு ஏழு வகைப்படும்.
* என் மாமா வந்தது திணை வழு, கபிலன் பேசினான் பால் வழு, நாங்கள் வந்தார்கள் - இட வழு, கமலா நாளை வந்தாள் - கால வழு, முட்டையிட்டது சேவலா, * பெட்டையா? வினாவழு, நாளை பள்ளி திறக்கப்படுமா? என்ற வினாவிற்கு என் மாமாவிற்கு உடல் நலமில்லை எனக் கூறுவது - விடை வழு, நாய் கத்தும் - மரபு வழு.
* இலக்கண முறையில்லா விடினும் இலக்கணமுடையதாக ஏற்றுக்கொள்வது வழுவமைதி
* பசுவைப் பார்த்து என இலட்சுமி வந்துவிட்டான் எனக் குறுவது - திணைவழுவமைதி.
* குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - இத்தொடர் காலவழுவமைதி
* பெயர்ச்சொல்லைக் கருத்தாவாக மாற்றுவது மூன்றாம் வேற்றுமை.
* கிழமைப் பொருளில் வருவது ஆறாம் வேற்றுமை.
* இராமனுக்குத் தம்பி இலக்குவனன். இதிலுள்ள வேற்றும் உருபு முறை பொருளில் வந்துள்ளது.
* கருவி கருத்தா ஆகிய பொருள்களில் வரும் உருபு ஆல், ஆன்.
* ஐந்தாம் வேற்றுமையில் "இல்" உருபு ஒப்பு, ஏது, நீக்கல் பொருள்களில் வரும்.
* ஏழாம் வேற்றுமையில் இல் உருபு இடப்பொருளில் வரும்.
* படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்க எட்டாம் வேற்றுமை பயன்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel