Type Here to Get Search Results !

உலக வெப்பமயமாதல் (Global Warming) :

இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். 
உலக வெப்பமயமாதல் என்றால் என்ன? நமது அநேக தொழிற்சாலைகள் , வாகனங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவில் புகை வெளியிடப்படுகிறது . அப்படி வெளிடப்படும் புகையில் அதிக அளவில் CO2 மற்றும் SO2 ஆகியவை உள்ளது . இந்த வாயுக்கள் பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தை அழிக்கும் சக்தி படைத்தவை. அதன் விளைவாக சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குகிறது . அதன் விளைவாக பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது 
பூமி வெப்பமயமாதலின் விளைவுகள்: 
பூமியின் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் . முதலாவது அண்டார்டிகா பகுதியில் உள்ள பெரும் பனிபாறைகள் உருகும் . தற்பொழுதும் பெருமளவில் பனிபாறைகள் உருகி கொண்டு தான் இருக்கின்றன . அதன் விளைவாக பெருமளவு தண்ணீர் கடலில் சேர்ந்து கடலின் நீர் மட்டம் உயரும் . கடலின் நீர் மட்டம் உயர்ந்தால் பெரும்பாலான தீவுகள் காணாமல் போகும் . மாத்திரமல்ல கடலோர கிராமங்களை கூட அரித்து கொண்டு போகும். 
உலக அளவிலாக கடந்த 100 ஆண்டுகளில், புவி மேற்பரப்பின் வெப்ப நிலை 0.74 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளதாம். 1850ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டவைகளிலேயே கடந்த 11 வருடங்கள் தான் அதிக (2001-2012) வெப்பமயமான வருடங்கள் 
பூமி வெப்பமயமாதலின் வரலாறு: 
இன்று உலக நாடுகள் என்பது எல்லா நாடுகளிலும் வசிக்கும் மக்களை. 
"உலகம் வெப்பமயமாதலை தடுக்க வேண்டும்...", "கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டுள்ளது...", "இந்த நூற்றாண்டிலோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ இந்த உலகம் கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டு விடும்!" 
என்று இப்போது எல்லோரும் அதைப்பற்றி பேசுகிறோம், அதை எப்படி தடுப்பது என்று மாநாடுகளெல்லாம் போடுகிறோம். ஆனால் இந்த உலகம் வெப்பமயமாதல் நேற்று, இன்று தோன்றியதில்லை.இதன் வரலாறு 17,000 ஆண்டுகள் பழமையானது! 
ஆம், 17,000 ஆண்டுகள் என்று சொல்லுவது சரியானதா? அல்லது அதற்க்கு முன்போ கூட உலக வெப்பநிலையில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். முதன் முறையாக நிகழ்ந்த அந்த வெப்பநிலை உயர்வு இயற்கையானது. என்பது அறிவியலாளர்களின் கருத்து. 
இதைப்பற்றி மேலும் அவர்கள் கூறும் பொது: 
மனித நாகரிகம் தோன்ற இந்த வெப்ப நிலை உயர்வு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. முதன் முதலாக உலகின் வட மற்றும் தென் துருவங்களில் இருந்த பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகத்தொடங்கின. ஆங்காங்கே இருந்த ஏரிகளும், நீர்நிலைகளும், நதிகளாக மாறின. இதன் தொடர்ச்சியாக கோடான கோடி டன் பனிப்பாறைகளும் உருகி நதிகளாக ஓடி கடலில் கலந்து கடல் நீர்மட்டம் உயார்ந்தது. 
கி.மு 10,000இல் அப்பிரிக்காவின் மத்தியிலுள்ள விக்டோரியா ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வழியத்தொடங்கியதில் பிரம்மாண்டமான நைல் நதி உருவானது.தென் அமெரிக்க வின் அமேசான் நதி தனக்குத்தானே வழி வகுத்துக்கொண்டது. தொடர்ந்து கிட்டத்தட்ட 3000௦௦ ஆண்டுகள் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகின. இதனால் பல பகுதிகள் 
நீரினால் மூழ்கடிக்கப்பட்டன. அமெரிக்காவிற்கும் பிறநாடுகளுக்கும் இடையிலான தரை வழி தொடர்பு துண்டிக்கப்பட்டது இதனால்தான். அதே போல் கொரியவுடனும், சைபீரியவுடனும் ஒர்ட்டிக்கொண்டிருந்த ஜப்பான் இதனால் தான் தனித்து விடப்பட்டது. கி.மு 15000 ௦௦இல் தற்போதுள்ள மெரீனா கடற்க்கரை 600 கி.மீ கிழக்குப் புறமாக தள்ளி இருந்தது! என்பதை உங்களால் நம்பமுடிகிறத? அண்மையில் குஜராத்தில் கடலுக்கடியில் 9 கி.மீ நீளத்தில் ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் அன்றைய மனிதன் இதனையெல்லாம் கவனிக்கவில்லை. அப்படியே கவனித்திருந்தாலும் அதனால் ஏற்ப்படும் பாதிப்புகளை அவன் அனுமானித்திருக்க வாய்ப்பில்லை. இன்று நாம் ஏன் இப்படி இதைப்பற்றி அதிகமாக கவலைப்படுகிறோம் என்றால்?... அன்று 3000௦௦ ஆண்டுகள் தொடர்ந்து பனிக்கட்டி உருகியதால் ஏற்ப்பட்ட கடல் நீர் மட்ட உயர்வை விட இன்று ஒரு நூற்றாண்டில் ஏற்ப்படும் கடல் நீர் மட்ட உயர்வு அதிகம். தற்போது நாம் வெளியேற்றும்அதிகப்படியான கார்பன் மற்றும் அவற்றின் கூட்டுப்பொருள்களின் அளவினால் உலக வெப்பநிலை உயர்வு வேகமாகவும், அதிகமாகவும் நிகழ்ந்து வருகிறது. 
ஆம்.20 ௦ம் நூற்றாண்டில் மட்டும் 17 செ.மீ கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 21 ம் நூற்றாண்டில் இது மேலும் 18-50 செ.மீ உயரும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. கடல் நீர் மட்டம் உயர்ந்த பொது ஏராளமான உயிரினங்கள் அழிந்து போயின. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து கடல் நீர் மட்ட உயர்வினால் அழிந்த உயிரினனகளில் மனித இனமும் ஒன்று. என்ற நிலை வரலாம். அல்லது மனிதன் தன் அசாத்தியமான அறிவுத்திறனால் புதிய உலகையே நிர்மாணிக்கலாம். ஆனால் அது வரையில் இப்போது இருக்கும் இடத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. அதற்கு அறிவியலாளர்கள் கூறும் வழி முறைகளை நாம் பின்பற்றித்தானாகவேண்டும். 
தட்பவெட்ப நிலை: 
கோடைக்காலத்தில் கடுமையான வெப்பத்தையும் குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியாகவும் உணர்கிறோம். இவைதான் நாம் அனுபவிக்கும் தட்பவெப்ப நிலைகள். ஓர் இடத்தின் தட்ப வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அனுபவிக்கும் சராசரியான கால நிலையைக் குறிப்பது. மழை, சூரிய ஒளி, காற்று, ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை இவையே ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் காரணிகள். 
சீதோஷ்ணநிலை மாற்றங்கள் திடீரென்றும், வெளிப்படையாகவும் ஏற்படும். ஆனால், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு நீண்ட காலமாகும். அதனால் அந்தளவுக்கு உடனடியாக அவற்றை உணர முடிவதில்லை. பூமியில் பலவிதமான தட்பவெப்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து வகையான உயிரினங்களும் அவற்றுக்கேற்ப இயல்பாகத் தம்மைத் தக்கவைத்து கொண்டிருக்கின்றன. 
இருந்தாலும் கடந்த 150-200 ஆண்டுகளில் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்டுவருகின்றன. சில குறிப்பிட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ள முடிவதில்லை. மனிதனுடைய நடவடிக்கைகளே இப்படிப்பட்ட மாற்றங்கள் இவ்வளவு வேகமாக நடைபெறுவதற்கான காரணம் என்று கருதப்படுகிறது.\ 
தட்பவெப்ப நிலை மாற்றங்களுக்கான காரணங்கள் 
வெப்பநிலை மாற்றங்கள் ஏற்படுத்துகிற காரணங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். இயற்கையானது மற்றும் மனிதனால் ஏற்படுவது. 
1. இயற்கையான காரணங்கள்: 
வெப்பநிலை மாற்றங்களுக்கு நிறைய இயற்கையான காரணங்கள் உள்ளன. கண்டங்களின் விலகல், எரிமலைகள், கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிசரிவு இதற்கான சில முக்கிய காரணிகள். 
கண்டங்கள் விலகுதல்: 
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன், நிலப்பரப்பு படிப்படியாக விலகியதால் ஏற்பட்டதே இன்று நாம் காணும் கண்டங்கள். இப்படிப்பட்ட இந்த விலகல் மற்றும் கடல் நீரோட்டங்களின் போக்குகளும், நீர்ப்பரப்புகளின் இடங்களை மாற்றின. இவை தட்பவெப்ப நிலையில் தாக்கங்கள் ஏற்படுத்தின. கண்டங்களின் விலகல்கள் இன்றும் தொடர்கின்றன. 
எரிமலைகள்: 
ஒரு எரிமலை வெடிக்கும்போது, அது மிகப் பெரிய அளவில் சல்ஃபர்-டை-ஆக்ஸைடு, (SO2) நீராவி, தூசி மற்றும் சாம்பல் இவற்றை வாயு மண்டலத்தில் வெளியேற்றுகிறது. இப்படிப்பட்ட இந்த எரிமலை வெடிக்கும் நிகழ்வு சில நாட்களுக்கே நீடிக்கிறது. இருப்பினும், மிகப்பெரும் அளவில் அவற்றிலிருந்து தூக்கி எறியப்படும் வாயு மற்றும் சாம்பல் தட்பவெப்பநிலை முறைகளில் பல வருடங்களுக்குத் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் மற்றும் தூசி, துகள்கள், சூரிய கதிர்களை ஓரளவுக்கு மறைக்கின்றன. இதனால் குளிர்ச்சி உண்டாகிறது. 
பூமியின் சாய்மானம்: 
பூமி தனது சுற்றுப்பாதையில் 23.5o கோணத்தில் செங்குத்தான நிலையில் சாய்ந்திருக்கிறது. இந்தப் பூமியின் சரிவில் ஏற்படும் மாற்றங்கள் பருவகாலங்களின் தீவிரத்தன்மையில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதிக சரிவு, கோடைக்காலங்களில் அதிக வெப்பத்தையும், குளிர்ந்த காலங்களில் அதிக குளிரையும் ஏற்படுத்துகின்றன. குறைந்த அளவு சாய்மானம் கோடையில் வெப்பத்தையும், குளிர்காலத்தில் குளிரையும் குறைக்கின்றன. 
கடல் நீரோட்டங்கள்: 
சமுத்திரங்கள் தட்பவெப்ப நிலை அமைப்பில் மிகமுக்கியமான பங்கு வகிக்கின்றன. அவை பூமியின் 71% பகுதியை ஆக்கிரமித்துள்ளன. சூரியன் கதிர்வீச்சை வாயு மண்டலம் மற்றும் நிலப்பரப்பு கிரகித்துக்கொள்வதைவிட இரு மடங்கு அதிகமாக இவை கிரகித்துக் கொள்கின்றன. 
2. மனிதனால் ஏற்படுவது: 
பசுமை இல்ல விளைவு 
பூமி, சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல் வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் ஒரு குறிப்பிட்ட அளவு (சுமார் 30%) சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் பிரதிபலிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. அவையாவன, கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு. இவைதான் ‘பசுமை இல்ல வாயுக்கள்’ (கிரீன்- ஹவுஸ் வாயுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. பசுமை இல்ல (கிரீன்- ஹவுஸ்) வாயுக்கள், நீராவியுடன் சேர்ந்து வாயு மண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இவை வாயு மண்டலத்தில் பிரதிபலிக்கப்படுகிற ஆற்றலிருந்து சிறிதளவைக் கிரகித்துக்கொள்கிறது. எப்படிப் பசுமை இல்லத்தின் கண்ணாடி சூரியக் கதிரியக்கத்தின் அதிகப்படியான ஆற்றலைத் தடுக்கிறதோ, அப்படியே இந்த ‘வாயுப் போர்வை’ பூமியில் வெளிப்படுத்தப்படும் சக்தியை கிரகித்துக்கொண்டு வெப்பநிலை அளவுகளைத் தக்க வைத்துக்கொள்கிறது. இதனால் இது ‘பசுமை இல்ல விளைவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 
ஜீன் - பாப்டிஸ்ட் ஃபோரியர் என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி இந்த பசுமை இல்ல விளைவை (கிரீன்- ஹவுஸ் விளைவு) முதன் முதலாக அடையாளம் கண்டவர். அவர் வாயுமண்டலத்தின் நிகழ்வு மற்றும் கிரீன்ஹவுஸ் நிகழ்வின் ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினார். 
கிரீன் ஹவுஸ் வாயுக்களாளான போர்வை, உலகம் உருவானதிலிருந்தே உள்ளன. ஆனால் மனித குலத்தின் நடவடிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்தக் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகமதிகமாக வாயு மண்டலத்திற்குள் விடப்படுகின்றன. இதன் விளைவாக, இந்தப் போர்வை தடிமனாகிக்கொண்டிருக்கிறது. இது ‘இயற்கையான கிரீன்ஹவுஸ் விளைவை’ பாதிக்கிறது. 
நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களை நாம் எரிக்கும்போது, கார்பன் - டை - ஆக்ஸைடு (கரிம வாயு) வெளியேற்றப்படுகிறது. மற்றும் நாம் காடுகளை அழிக்கும்போது, மரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்பன் வாயு மண்டலத்தில் கார்பன் - டை - ஆக்ஸைடாகக் கலக்கிறது. அதிகரித்துவரும் விவசாய நடவடிக்கைகள், நிலத்தைப் பயன்படுத்தும் முறையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் வேறுசில நடவடிக்கைகள் இவை அனைத்தும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை அதிகரிக்கச் செய்கின்றன. தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளும் செயற்கையான மற்றும் புதிய கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதாவது CFCக்கள் (க்ளோரோஃபுளூரோ கார்பன்கள் (Chlorofluorocarbons) போன்றவற்றை வெளியேற்றுகின்றன. மோட்டார் வாகனங்கள் வெளியேற்றும் புகை ஓஸோனை அதிகரிக்கச் செய்கின்றன. அதிகரிக்கப்பட்ட வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கிறது. இந்த விளைவு பொதுவாக 'உலகம் வெப்பமயமாதல்' அல்லது 'வெப்பநிலை மாற்றம்' என்று குறிப்பிடப்படுகிறது. 
கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பிற்கு நாம் எப்படி காரணமாக இருக்கிறோம்? 
நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்துவது. அதிக நிலத்திற்காக மரங்களை அதிகமாக வெட்டிப்போடுவது. மக்கிப் போகாத கழிவுப் பொருள்களின் (ப்ளாஸ்டிக்) பெருக்கம்.விவசாயத்திற்காக உரங்கள், பூச்சிக்கொல்லிகளைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துதல். 
தட்பவெப்பநிலை மாற்றம் நம்மை எப்படிப் பாதித்தது? 
வெப்பநிலை மாற்றம் மனித குலத்துக்கே அபாயமானது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பூமியின் சராசரி வெப்ப நிலை, 0.3 - 0.60C வரை உயர்ந்துள்ளது. இந்த வெப்ப நிலை உயர்வு நமக்கு மிகவும் குறைந்த அளவாகத் தோன்றலாம். ஆனால், கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பேரழிவுக்கு இவை வழி வகுக்கும். 
விவசாயம் 
அதிகரித்துவரும் மக்கள் தொகை உணவுக்கான தேவையை அதிகரிக்கிறது. இதனால் இயற்கை வளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. வெப்பநிலையில் ஏற்படும் வேறுபாடுகள், தட்பவெட்ப நிலை மற்றும் மழை ஆகியவற்றில் மாறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம், விவசாயத்தை நேரடியாக பாதிக்கிறது. மண்வளம், பூச்சிகள் மற்றும் நோய்களின் மாற்றங்கள் மூலமாக மறைமுகமாக விவசாயத்தை பாதிக்கிறது. தானிய வகைகளில் விளைச்சல் இந்தியாவில் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மிகக் கடுமையான வெப்பம், மிக அதிகமான மழை, வெள்ளம், வறட்சி முதலிய அதீதமான சீதோஷ்ண நிலைகளும் விளைபொருள்களின் உற்பத்தியைப் பாதிக்கின்றன. 
வானிலை 
உயர்ந்து வரும் வெப்பநிலை, மழை பெய்யும் நிலவரங்களை மற்றக்கூடியது. வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படுதலை அதிகரிக்கச் செய்கிறது. பனிப்பாறைகள் மற்றும் துருவப் பனிப்படிவங்கள் உருகுவது அதிகரிப்பதால், கடல் மட்டம் அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் புயல், சூறாவளி போன்றவற்றுக்கும் வெப்பநிலை மாற்றங்களின் விளைவுகளே காரணம் என்று கருதப்படுகிறது. 
கடல் மட்டம் அதிகரித்தல் 
வெப்பநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்று கடல் மட்ட உயர்வு. கடல்நீர் வெப்பமடைதல், பனிப்பாறைகள் மற்றும் போலார் பனி படிவுகள் உருகுதளால், அடுத்த நூற்றாண்டுக்குள் சுமார் அரை மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரப்போகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதால், மணல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதிகள் கடலில் மூழ்குதல், வெள்ளப் பெருக்கு ஏற்படுவது அதிகரிப்பது, நீர்நிலைகள் உவர்ப்பாக மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். 
இவை, கடல் பகுதி விவசாயம், குடிநீர் ஆதார வளங்கள், மீன்பிடி தொழில், மக்கள் குடியிருப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். 
உடல் நலம் 
பூமி வெப்பமயமாதல் மனிதகுல ஆரோக்கியத்தை நேரடியாக பாதித்து, வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகும். உடலில் நீரிழப்பு, தொற்று நோய் பரவல், ஊட்டச் சத்துக் குறைபாடு, பொது மருத்துவம் சார்ந்த உள்கட்டமைப்பைப் பாதித்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும். 
காடுகள் மற்றும் வன விலங்குகள் 
இயற்கையான சூழலில் இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வெகு விரைவில் பாதிக்கப்படுகின்றன. வெப்பமாற்றத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்தால், பல்வேறு தாவர இனங்களும், விலங்கினங்களும் அழியக்கூடிய நிலை ஏற்படலாம். 
கழிவுகளினால் ஏற்படும் விளைவுகள் 
பெருகி வரும் தொழில்மய நடவடிக்கைகளும் அதனால் விளையும் பெருங்கழிவுகளும் (அணு மற்றும் அனல் மின் திட்டங்கள்,துறைமுகங்கள், சுரங்க நடவடிக்கைகள், உரக்கழிவுகளை அதிகரிக்கும் விவசாயத் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்கள், நகர்மயமாதலால் விளையும் கழிவுகள், போன்றவை) வெப்ப நிலை அதிகரிப்பிற்குக் காரணாமாக உள்ளன. நகராட்சிக் கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் 80%க்கும் மேல் நச்சு இரசாயனங்கள், கனஉலோகங்கள், திட உயிர்க் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டது. சூடான தொழிற்சாலைக் கழிவுகளும் கடல் நீரில் கலக்கப்படுகிறது. இந்த அனைத்து கழிவுகளும், கடற்கரை நீரோட்டத்தின் மூலம் பரவலாக்கப்படுகிறது. இந்த மாசுபாடுகள் கடல் உணவுச் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி, கடல் உணவை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் ஆரோக்கியக் கேட்டினை ஏற்படுத்துகிறது. 
தடுப்பு நடவடிக்கைகள் 
  • புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களின் உபயோகங்களைக் குறைத்துக்கொள்தல் (நிலக்கரி போன்ற எரிபொருட்கள்). 
  • எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் முக்கியமாக பெரிய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகைமண்டலத்தை மாசு கட்டுப் பாட்டு வாரியம் தடை செய்ய வேண்டும் 
  • புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களின் உபயோகத்தை அதிகரித்தல்- சூரிய மற்றும் காற்று ஆதாரங்கள் முதலியவை. 
  • அதிக அளவில் மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேலும் மரங்களை வளர்த்தல். 
  • மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களின் கண்மூடித்தனமான உபயோகத்தை தவிர்த்தல் 
  • காடுகளை அழிவிலிருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel