Type Here to Get Search Results !

நிதி சந்தை (Financial market) & முதல் கணக்கு (Capital account)

நிதி சந்தை (Financial market)
நிதி சந்தையில் ‘நிதி உரிமைகள்’ (Financial Claims) என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும் நிதி மீதான உரிமையைத் தருகின்ற பத்திரங்களை வாங்குவதும் விற்பதும் நடைபெறுகிறது. ஒவ்வொரு விதமான பாத்திரத்திற்கும் ஒரு சந்தையும் அதற்குரிய தனித்தன்மையோடு செயல்படும்.
ஒருவரின் கடன் பத்திரத்தை நீங்கள் வைத்திருந்தால் அவரின் நிதியில் உங்களுக்கு உரிமையிருக்கிறது என்று அர்த்தம். ஒரு நிறுவனத்தின் பங்கு பத்திரத்தை நீங்கள் வைத்திருந்தால் உங்களுக்கு அந்நிறுவனத்தின் நிதியில் உரிமை உள்ளது. நிதி உரிமையின் தன்மைகளெல்லாம் அப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் குறிப்பாக நிதியின் தன்மை, கால அளவு ஆகியவை மாறுபடும்.
இந்த நிதி உரிமைகளின் கால அளவுகள் அடிப்படையில் நிதி சந்தைகள் பிரிக்கப்படுகின்றன. ஒரு வருடத்திற்கும் குறைவாக கால அளவு உள்ள பத்திரங்களின் சந்தைகளை பணச் சந்தை (Money Market) என்றும், ஒரு வருடத்திற்கு அதிகமாக கால அளவு உள்ள பத்திரங்களின் சந்தைகள் முதல் சந்தை (Capital Market) என்றும் பிரிக்கப்படுகிறது.
நிதி சந்தை வேறு ஒரு விதத்திலும் வகைப்படுத்தப்படுகிறது. ஒரு பத்திரம் முதல் முறையாக விற்பனைக்கு வரும் போது அதனை முதன்மை சந்தை (Primary Market) என்றும், அப்பத்திரம் மறு விற்பனைக்கு வரும்போது அதனை துணைநிலை சந்தை அல்லது இரண்டாம்நிலை சந்தை (Secondary Market) என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
இரண்டாம்நிலை சந்தையில் பத்திரங்கள் இரண்டு விதமாக விற்பனை செய்யப்படும். ஒன்று, நேரடியாக வாங்குபவருக்கு விற்பனை செய்வது. இதனை ‘Over the counter’ சந்தை என்பர், அதாவது விற்பனை மேடையில் நேரடியாக வாங்குபவரும் விற்பவரும் பரிவர்த்தனையில் ஈடுபடுவது. இதில் பத்திரங்களின் விலைகள் பேரம் பேசப்பட்டு உடனடியாக காசும் பத்திரங்களும் கைமாறும்.
Exchange traded market என்பது பத்திரங்களை ஒரு எக்ஸ்சேஞ் மூலமாக விற்பனை செய்வது. உதாரணமாக பங்கு சந்தை மூலமாக பங்குகளை விற்பதும், வாங்குவதும். இங்கு குறிப்பாக இடைத்தரகர்கள் (Brokers) மூலமாக வியாபாரம் நடைபெறும்.
நிதி பத்திரத்தின் விலை முடிவு செய்யப்பட பிறகும் சில நாட்கள் கழித்தே Exchange traded market-ல் பரிவர்த்தனை முடித்துகொள்ளப்படும். பத்திரங்கள் பற்றியும் சந்தை அமைப்பு பற்றியும் விரிவாக பார்க்கும்போது இதில் உள்ள வார்த்தைகள் இன்னமும் தெளிவாகப் புரியும்.
முதல் கணக்கு (Capital account)
அரசின் பட்ஜெட்டில் ஒரு பகுதி முதல் கணக்காகும். முதல் கணக்கில் வருவாய், செலவு என இரண்டு பிரிவுகள் இருக்கிறது.
வருவாய்:
1.மாநில அரசுகளுக்கு அரசு நிறுவனங்களுக்கு அல்லது அரசு ஊழியர்களுக்குக் கொடுத்த கடன் தொகை திரும்பப் பெறுவதை முதல் கணக்கில் வருவாயாக வைக்கப்படும்.
2. அரசு பெறும் அனைத்துக் கடன்களும் (உள்நாட்டு மற்றும் வெளிநாடு கடன்கள்) முதல் கணக்கில் வருவாயாக வைக்கப்படும்.
செலவு: முதல் கணக்கில் இருக்கும் செலவு அரசுக்கு ஏதாவது வருமானத்தையோ அல்லது சொத்தையோ ஈட்டித்தரவேண்டும். அரசு மற்றவர்களுக்குக் கொடுக்கும் கடன், அரசுக்கு வட்டியை ஈட்டித்தரும் அதே போல அரசு நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு, கட்டிடம், சாலை என பல சொத்துகளை ஈட்டித்தரும்.
அரசின் செலவுகள் (முதல் கணக்கில்) வருமானத்தை ஈட்டிதரும் என்பதால் கடன் பெற்று செலவுகளை செய்யலாம் என்று கூறப்படுகிறது. எனவே அரசு பெரும் கடன்கள் அனைத்தும் முதல் கணக்கில் வருவாயாக வைக்கப்படும். பொதுவாக முதல் கணக்கில் பற்றாக்குறை இருக்காது. வருவாய் கணக்கில் பற்றாக்குறை இருந்தால் அதற்கும் சேர்த்து முதல் கணக்கில் கடன் பெறப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel