Type Here to Get Search Results !

CURRENT AFFAIRS / GENERAL KNOWLEDGE OF WORLD, INDIA, TAMILNADU IN TAMIL - JULY 2017


நடப்பு நிகழ்வுகள் –  ஜூலை 2017
  • தமிழக காவல்துறையின் உளவுத்துறை DGP மற்றும் கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு DGP ஆக பதவி வகித்து வந்த டி.கே.ராஜேந்திரன் IPS , கடந்த ஜூன் 30 -ம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் , 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு DGP ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • பள்ளி பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் ட்ராஸ்கி மருது, மயில்சாமி அண்ணாதுரை.
  • பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டம் உருவாக்குவதற்கான வடிவமைப்புக் குழுவில்ட்ராட்ஸ்கி மருது, மயில்சாமி அண்ணாதுரை இடம் பெற்றுள்ளனர்.ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர்மட்டக் ‌‌ குழுவில் சில மாற்றங்களும் செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
  • அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், ஐ.ஐ.டி கான்பூரின் முன்னாள் இயக்குநருமான ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பாடத்திட்ட மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
  • வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ராமானுஜம், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுந்தரமூர்த்தி, எழுத்தாளரும் சூழலியல் ஆய்வாளருமான தியோடர் பாஸ்கரன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்ட 10 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். 
  • மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட பாடத்திட்ட மாற்றம் சார்ந்த உயர்மட்டக் குழுவில் உறுப்பினர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைப் பல்கலைக்கழக துறைத் தலைவராக இருந்த பி.எஸ்.பாலசுப்ரமணியன், பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் சுவாமிநாதபிள்ளை ஆகியோருக்கு பதிலாக இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
  • ஆகஸ்ட் 2017-ல் மெல்பேர்னில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவின் நல்லெண்ண தூதராக வித்யா பாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பெரு நாட்டிற்கான அமெரிக்க தூதராக, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கிருஷ்ணா R. அர்ஸ்-ஐ அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.
  • இரண்டாவது சர்வதேச திறன் வளர்ச்சி மாநாடு, பாரிசில் கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 23 -ம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது.
  • சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மார்க் வான் மஹொத்சவ் (மரங்களின் திருவிழா) டெல்லியில் தொடங்கினர்.இது ஒரு மாத காலம் நடைபெற உள்ளது
  • சீனாவின் தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) , குஜராத்தில் 4,000 கிராமங்களுக்கான சாலைகள் அமைக்க 329 மில்லியன் கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
  • இந்தோனேசியாவின் அடுத்த தூதுவராக #பிரதீப்_குமார்_ராவத் நியமிக்கப்பட்டார்.
  • நாட்டின் 21-வது தலைமை தேர்தல் ஆணையராக #அச்சல்_குமார்_ஜோதி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாளை பொறுப்பேற்றுக் கொள்ளும் இவர், அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வரை இந்தப் பதவியில் இருப்பார்.
  • தலைமை தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் ஆணையர்கள் #6_ஆண்டுகள் அல்லது #65_வயது வரை இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவி வகிக்கலாம்
  • BRICS கல்வி அமைச்சர்கள் மாநாடு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்றது.
  • அருணாசலபிரதேசத்தில் பாரம்பரிய திருவிழாவான #Dree_Festival கொண்டாடப்பட்டது.
  • ஹரியானா அரசு போலந்து மாதிரியை அடிப்படையாக கொண்டு மின்சார பேருந்துகளை இயக்க உள்ளது
  • கர்நாடகவின் பாரம்பரிய விளையாட்டான #காம்பளா விளையாட்டிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்
  • கோவா  மாநிலம் முழுவதும் GST தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதற்காக கோவா அரசு வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடங்க உள்ளது
  • ஸ்வாம்_ஷிக்ஷன்_பிராயோகம் எனும் திட்டத்தின் கீழ்  ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஈகட்டேர் பரிசை புனே தேசியஅரசியலமைப்பு நிறுவனம் வென்றது.
  • கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் G Ride என்னும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.இதன் மூலம் வாகனங்களின் பயன்பாட்டை பாதியாக குறைப்பதாகும்.
  • இலங்கை புதிய ராணுவ தளபதியாக மகேஷ் சேனாநாயகே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • குஜராத் வாட்நகர் ரயில் நிலையம்:பிரதமர் மோடி சிறு வயதில் டி விற்ற இடமான வாட்நகர் ரயில் நிலையம் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
  • உத்திரபிரதேசத்தை சார்ந்த கரண்சிங் என்ற சிறுவன் 8 வயதில் 6அடி 6 அங்குலம் வளர்ந்து உலகிளையே_மிக_உயரமான சிறுவனக சாதனை படைத்து உள்ளார்.
  • CBSE தரத்தை விடவும் மேம்பட்டவகையில் பாடத்திட்டத்தை வடிவமைக்க  அனந்தகிருஷ்ணன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது
  • இந்தூர் - இந்தியாவின் முதல் நகரம்  போக்குவரத்து கட்டுப்படுத்த ரோபோ பயன்படுத்தியுள்ளது
  • உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள "முகல்சராய் ரயில் நிலையத்தின்" பெயரை "தீன்தயாள் உபத்யயா" என மாற்ற அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது
  • "Larsen" நிறுவனம் இந்திய கப்பற்துறைக்காக உள்நாட்டிலியே தயாரிக்கப்பட்ட முதல் கப்பற்கூடத்தை(Dock) வழங்கியுள்ளது
  • யாழில் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச மாநாடு!
  • உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 வது சர்வதேச மாநாடு யாழில் நடைபெறவுள்ளது
  • இதனை மாநாட்டின் சிறப்பு தலைவரும், கல்வி அமைச்சருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  • மேலும், இந்த மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 5 மற்றும் 6 ம் தேதிகளில் யாழ்ப்பாணத்தில் மிகவும் விமரிசையாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
  • இராக்கின் மோசூல் நகரிலுள்ள 840 வருடம் பழமை வாய்ந்த அல் நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்துள்ளனர்.
  • கடந்த ஜூன் மாத இறுதியில், பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தின்போது அமெரிக்க அதிபருக்கு அளித்த பரிசுப் பொருள்கள் பற்றிய விபரம் .
  • ஆபிரகாம் லிங்கனின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு இந்தியா தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது அதன் அசலான முத்திரையை ட்ரம்புக்கு வழங்கினார்.
  • மேலும் காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து புகழ்பெற்ற தேயிலை மற்றும் தேன் அத்துடன் இமாச்சலப்பிரதேசத்திலிருந்து வெள்ளிக் காப்பு மோடி வழங்கினார்.
  • ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்புக்கு காஷ்மீரின் கைகளால் நெய்த சால்வைகளைப் பரிசாக வழங்கினார்
  • இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பெற்ற பிரதமர் மோடி, இந்தியா சார்பாக கேரளாவிலிருந்து கொண்டு சென்ற  இரு நினைவுப் பரிசுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வழங்கியுள்ளார்.
  • யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடுகள் நினைவுப்பரிசாக வழங்கியுள்ளார். இவை 9-ஆம் மற்றும் 10-ஆம் நூற்றாண்டை சார்ந்தவை.
  • இதில் முதல் காப்பர் தகடு யூதர்களின் தலைவரான ஜோசப் ராபனுக்கு, அப்போதைய ஆட்சியில் இருந்த இந்து அரசர் சேரமான் பெருமாளால் வழங்கப்பட்டது.
  • இரண்டாவது தகடு, இந்தியாவுடனான யூதர்களின் வர்த்தகம் குறித்து விளக்குகிறது.
  • இந்த தகடுகள் கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன் தேவாலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
  • இந்தத் தகடுகளுடன் கேரளாவிலுள்ள யூத சமூகத்தைச் சேர்ந்த பழமையான தோரா சுருளையும் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
  • தென்னிந்தியாவின் கலையை பிரதிபலிக்கும் தங்கத்தால் பூசப்பட்ட உலோக கிரீடம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.
  • இந்தியாவின்  மிக பழமையான பத்திரிகையான Statesman.,  ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் பதவிகாலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை “President Pranab Mukherjee – A Statesman” என்ற பெயரில் தயாரித்துள்ளது .
  • இதனை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார் .
  • Ivory Coast International badminton tournament - Abidjan நகரில் நடைபெற்ற ஐவரி கோஸ்ட் சர்வதேச பாட்மிண்டன் போட்டி , பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின்  ரித்திகா தாகேர் ( Ritika Thaker ) மற்றொரு  இந்திய வீராங்கனை சிம்ரன் சிங்கியை  ( Simran Singhi ) தோற்கடித்து பட்டம் வென்றுள்ளார்.
  • பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரித்திகா தாகேர் மற்றும் சிம்ரன் சிங்கி ஜோடி, நைஜீரியா நாட்டை சேர்ந்த Zainab Momoh & Peace Orji ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளனர்.
  • G-Ride - போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் , மென்பொருள் பணியாளர்கள் பலரும் சேர்ந்து / பகிர்ந்து செல்லக்கூடிய வாகன போக்குவரத்தை ஊக்குவிக்க கேரளா முதலவர் G-Ride திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
  • மத்தியப் பிரதேச மாநிலத்தில் காற்று, நீர் ஆகியவை மாசுபடுவதைத் தடுத்துச் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக , ஜூலை 03 அன்று காலை 07 மணி முதல் மாலை 07 வரை 12மணி நேரத்தில்  நர்மதை ஆற்றின் கரையில் ( 24 மாவட்டங்களில் ) 6 கோடி மரங்கள் நடப்பட்டு கின்னஸ் சாதனை செய்யப்பட்டுள்ளது.
  • சீகூர் மாவட்டத்தின் அமர்கந்தக் நகரில் நர்மதை ஆற்றங்கரையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்  இதனை தொடங்கி வைத்துள்ளார்.
  • Sansad Adarsh Gram Yojana திட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டுக்கு,  வாரணாசி தொகுதிக்கு உட்பட்ட Kakrahia என்னும் கிராமத்தை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.
  • Kakrahia கிராமம் மல்யுத்த விளையாட்டுக்கு மிகவும் புகழ்பெற்றது ஆகும்.
  • ஏற்கனவே 2014ம் ஆண்டில் Jayapur மற்றும்  2015ல்  Nagpur கிராமங்களை பிரதமர் தேர்வு செய்து இருந்தார்.
  • ஃபிபா கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 96வது இடம் பெற்றுள்ளது.கடந்த 1996ல் இந்திய அணி 94வது இடத்தைப் பிடித்தது. இதற்குப் பிறகு, இந்திய அணியின் சிறந்த முன்னேற்றம் இதுவாகும்.
  • ‘செல்பி’ ஸ்டிக்குகளை இந்திய அருங்காட்சியகங்களுக்குள் பார்வையாளர்கள் இனி எடுத்துச் செல்ல,  இந்திய தொல்லியல் துறை தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது.
  • மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவலை தொடர்ந்து பாதுரியா பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது.  கலவர பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, போலீஸார், மாணவர்கள், இளைஞர்கள் இணைந்த  சாந்தி வாஹினி  என்ற அமைதிப்படை உருவாக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
  • சிக்கிம் மாநிலத்தில் முதல் அரசு பொறியியல் கல்லூரி சிசோபானியில் கட்டப்பட உள்ளது. இதற்கு முதலமைச்சர் பவன் சாம்லிங் அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • பிரதமர் நரேந்திர மோடி இளவயதில் பணியாற்றிய வட்நகர் ரெயில் நிலைய டீ கடையை சுற்றுலா தலமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.8 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
  • கர்நாடக மாநில அரசு பாரம்பரியமிக்க ‘கம்பளா’ விளையாட்டை நடத்த அவசர சட்ட மசோதாவை அந்த மாநில சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
  • கல்வி பயில உரிய வசதி இல்லாத திருநங்கைகள் எந்த வித கட்டணமும் இல்லாமல் அனைத்து விதமான படிப்புகளையும் தேர்ந்தெடுத்து, முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என இந்திரா காந்தி திறந்த நிலை  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.ஏற்கனவே தமிழகத்தின் மனோன்மணியம் பல்கலைக்கழகம், திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்குவதாக அறிவித்துள்ளது.
  • ஜெர்மனி நாட்டின் முக்கிய நகரான ஹம்பர்க்கில் ஜூலை 07 & 08,  ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.
  • வியட்நாமில் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக, 2030-ம் ஆண்டிற்குள் மோட்டார் சைக்கிள்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு தலைநகர் ஹனோய் நகர  நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
  • தேளின் வி‌ஷத்தில் மருத்துவ குணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது உயிர்காக்கும் மருந்துகளில் கலக்கப்படுகிறது. எனவே தேள்களிடம் இருந்து வி‌ஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
  • தேளில் இருந்து வி‌ஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’வை விஞ்ஞானி மொயுத் மிகாமல் கண்டு பிடித்துள்ளார். அதற்கு ‘#வெஸ்ட்-4’ என பெயரிட்டுள்ளார்.
  • உள்நாட்டுப் போர் மற்றும் வன்முறை வெறியாட்டங்களால் பாதிக்கப்படும் நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆற்றப்படும் அமைதிப் பணிகளுக்கான இந்த ஆண்டு நன்கொடையாக 5 லட்சம் டாலர்கள் அளிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
  • இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி,  மைத்ரி - 2017 , ஹிமாச்சல பிரதேசத்தின்  Bakloh ல்  நடைபெறுகிறது. ஏற்கனவே மார்ச் மாதத்தில்   இந்தியா - ஓமன்  இணைந்து மேற்கொண்ட Al Nagah - II 2017 இதே இடத்தில் நடைபெற்றுள்ளது.
  • தேசிய பேரிடர் மீட்பு படையின் (  National Disaster Response Force - NDRF) பொது இயக்குனராக சஞ்சய் குமார் IPS நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே இப்பதவியில் இருந்துவந்த R.K. பச்நந்தா, இந்தோ - திபெத் எல்லை காவல் (ITBP)  பிரிவின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், இஸ்ரேலி க்ரைசாந்துமன் என்ற மலருக்கு ‘மோடி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  •  மத்தியபிரதேசத்தின் போபால்  நகரில், சர்வதேச திறன் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
  • அடுத்த நிதியாண்டு முதல் விவசாயத்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்தி புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களைப் புதிதாக உருவாக்கவும் 10 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது.இந்தக் குழுவுக்கு ஐஐடி கான்பூர் முன்னாள் தலைவரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குழுவில், முனைவர் ஆர்.ராமானுஜம், பேராசிரியர், கணித அறிவியல் நிறுவனம், தரமணி, சென்னை,முனைவர் ஈ.சுந்தரமூர்த்தி, முன்னாள் துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,முனைவர்.கு.ராமசாமி, துணைவேந்தர், வேளாண்மைப் பல்கலைக்கழகம்,கோவை, சு.தியோடர் பாஸ்கரன், எழுத்தாளர் மற்றும் சூழலியல் ஆய்வாளர், பெங்களூரு,
  • முனைவர் சுல்தான் அஹமது இஸ்மாயில், முன்னாள் துறைத் தலைவர், உயிர் தொழில்நுட்பவியல் துறை, புதுக் கல்லூரி,முனைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், பேராசிரியர், சென்னை,
  • கலாவிஜயகுமார், கல்வியாளர், சென்னை,
  • டிராட்ஸ்கி - மருது, ஓவியர் அகியோர் உறுப்பினர்களாகவும்.
  • சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தென்அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பிய விண்வெளி தளத்தில் இருந்து, ஜூன் 29 அன்று  ‘ஏரியான் 5 விஏ 238’ ராக்கெட் மூலம் ஜிசாட் 17 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
  • ஜிசாட் 17 செயற்கைக்கோள் 3,477 கிலோ எடை கொண்டதாகும்.  இதன் ஆயுட் காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
  • ஜிசாட் 17-ஐ சேர்த்து இதுவரை 31 தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இதில் 19 செயற்கைக்கோள்கள் ஏரியான் ராக்கெட் மூலமும் 10 செயற்கைக்கோள்கள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமும் ஒரு செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 3 தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.
  • பழைய செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 17 செயற்கைக்கோள்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் ஜிசாட் -17 செயற்கைக்கோள் 18-வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைக்கோளாக சேவையை தொடங்க உள்ளது.
  • பசி மற்றும் ஊட்டச்சத்து இன்மைக்கு எதிராகப் போராடி வரும் அங்கித் கவத்ரா  என்னும் இந்திய இளைஞருக்கு இங்கிலாந்து ராணி இளம் தலைவர்கள் விருது வழங்கிக் கவுரவித்துள்ளார்.
  • இந்தியாவில் பசி மற்றும் உணவை வீணாக்குதலை ஒழிக்க அங்கித், 'ஃபீடிங் இந்தியா' என்னும் அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
  • 2014-ல் 5 பேரோடு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, இன்று இந்தியா முழுக்க 43 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் 4,500 தன்னார்வலர்கள் பணிபுரிகின்றனர். மீதமாகும் உணவு 80 லட்சம் மக்களுக்கு அளிக்கப்படுகிறது.
  • இந்த சேவையைப் பாராட்டி அங்கித்துக்கு இங்கிலாந்து ராணி உயரிய விருதை வழங்கியுள்ளார்.
  • புதுச்சேரியில்  நியமன எம்.எல்.ஏ.க்களாக, மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி தாளாளர் செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • உதய் ரயில் திட்டம்  ( Utkrisht Double-Decker AC Yatri == Uday) சில தொலைதூர இடங்களுக்கு ஒரே இரவில் சென்றடையும் வகையில் உதய் எனப்படும் டபுள் டெக்கர் ரயில் திட்டம்  2016-17 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது ஜூலையில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது.முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் 120 பயணிகள் அமர்ந்து பயணிக்க முடியும்.இது தவிர, பெரிய எல்சிடி திரை, வைபை ஸ்பீக்கர் சிஸ்டம், தானியங்கி உணவு, டீ மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.முதல்கட்டமாக டெல்லி - லக்னோ வழித்தடம் போன்று அதிக தேவை மிகுந்த வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.கோவை - பெங்களூர் இடையே பகல் நேர 2 அடுக்கு ஏசி ரயில் (22665 / 22666) இயக்கப்பட உள்ளது. இது தவிர விஜயவாடா- விசாகப்பட்டினம்,  மும்பை பாந்தரா - ஜாம்நகர் (குஜராத்) இடையே மேலும 2  உதய் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். மற்ற ரயில்களைவிட 40 சதவீதம் கூடுதல் பயணிகளை இது ஏற்றிச் செல்லும்.
  • அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தஹி சில நாட்களுக்கு முன்பு பதவி விலகியதால்  புதிய அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். வேணுகோபால், பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருது பெற்றவர். மொரார்ஜி தேசாய் ஆட்சியின் போது கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.
  • அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு, சிறந்த குடியேற்றவாசி விருது வழங்கப்பட உள்ளது.அடோப் தலைவர் சாந்தனு நாராயண், முன்னாள்  அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
  • மத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு அரசிதழில் வெளியீடு !!மத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு, அரசிதழில் வெளியிடப்பட்டது. உயர்த்தப்பட்ட படிகள், இந்த மாத சம்பளத்தில் வழங்கப்படும்.மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க 7-வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன், 197 படிகளை ஆய்வு செய்தது. அவற்றில் 53 படிகளை கைவிடுமாறு சிபாரிசு செய்தது. 37 படிகளை மற்ற படிகளுடன் இணைக்குமாறு கூறியது.சம்பள கமிஷன் கைவிடுமாறு கூறிய 53 படிகளில், 12 படிகளை கைவிடுவது இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், படிகள் குறித்த சிபாரிசுகளில், 34 திருத்தங்கள் செய்தது.இந்த திருத்தங்களுடன் கூடிய 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுக்கு மத்திய மந்திரிசபை கடந்த மாதம் 28-ந் தேதி ஒப்புதல் அளித்தது.இந்த சிபாரிசுகள், நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டன. இதனால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் அடைவார்கள்.
  • 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்த படிகளால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.29 ஆயிரத்து 300 கோடி செலவாகி இருக்கும். ஆனால், படிகளில் திருத்தங்களும் செய்யப்பட்டதால், ரூ.1,448 கோடி சுமை அதிகரித்து, மொத்தம் ரூ.30 ஆயிரத்து 748 கோடி கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • உயர்த்தப்பட்ட படிகளை, ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. எனவே, இந்த மாத சம்பள ரசீதிலேயே உயர்த்தப்பட்ட படிகள் இடம்பெறும் வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உரிய ஆணையை பிறப்பிக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
  • நகரங்களைப் பொறுத்து, 8 சதவீதம் (ரூ.1,800), 16 சதவீதம் (ரூ.3,600), 24 சதவீதம் (ரூ.5,400) என்ற விகிதங்களில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட உள்ளது.
  • அகவிலைப்படி 50 சதவீதம் மற்றும் 100 சதவீதத்தை எட்டும்போது, வீட்டு வாடகைப்படியை மாற்றி அமைக்க வேண்டும் என்று சம்பள கமிஷன் சிபாரிசு செய்தது. ஆனால், 25 சதவீதம் மற்றும் 50 சதவீதத்தை எட்டும்போதே வீட்டு வாடகைப்படியை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • நர்சுகளுக்கு மாதந்தோறும் உடை படி என்ற புதிய படி அறிமுகப்படுத்தப்படுகிறது.
  • 22–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 2–வது நாளில் 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை இந்தியா அள்ளியது. 3–வது நாளான நேற்றும் இந்தியா மேலும் 4 தங்கப்பதக்கங்களை வென்று பிரமாதப்படுத்தியுள்ளது.
  • இந்த நிலையில் இன்று 4-வது நாளாக நடைபெற்ற போட்டியில் மகளிர் 3000 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சுதா சிங் தங்கம் வென்றார்.  இதனையடுத்து இந்தியா இது வரையில் 7 தங்கப்பதக்கம்வென்று முதல்-இடத்தில் உள்ளது.
  • அட்லாண்டின் கடலில் உள்ள மேற்கு ஆப்பிரிக்க தீவு நாடான கானா,  முதன் முறையாக செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அதன் பெயர் #கானாசாட்-1. இதை கொபோரிடுயாவில் உள்ள சர்வதேச நாடுகள் பல்கலைக் கழக மாணவர்கள் தயாரித்துள்ளனர்.
  • வைக்கம் விஜயலட்சுமியை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை அவருக்கு வழங்கி  இருக்கிறது.
  • சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை 43.48 கி.மீ. தூரத்திற்கு செயல்படுத்தப்போவதாக தமிழக அரசு  தெரிவித்துள்ளது.
  • சென்னை பூந்தமல்லியிலிருந்து கத்திபாராவரையில் முதல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதில் இணைப்பாக போரூரிலிருந்து வட பழனிக்கு ஒரு தடம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக 20.68 கி.மீ. தூரத்திற்கு ரயில் செல்லும். இந்தத் திட்டத்திற்கு 3,267 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இரண்டாவது திட்டம் 3,135.63 கோடி ரூபாய் செலவில் வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.8 கி.மீ. தூரத்திற்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் தற்போது 27% பேர் மட்டுமே பொதுப்போக்குவரத்து வசதியைப் பயன்படுத்திவருகின்றனர். இதனை 2026ஆம் ஆண்டில் 46% உயர்த்த வேண்டுமென தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
  • சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் (ஐடியு) 2-வது சர்வதேச இணையதள பாதுகாப்பு குறியீட்டை வெளியிட்டுள்ளது. இதன்படி, இணையதள பாதுகாப்பு ஏற்பாடுகள் அடிப்படையில் 165 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், இந்தியா 0.683 புள்ளிகளுடன் 23-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் 0.925 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, மலேசியா, ஓமன், எஸ்டோனியா, மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, ஜார்ஜியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள் ஆகும். ரஷ்யா 11-வது இடத்தில் உள்ளது.
  • ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெறும் 22வது  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்
  • குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.28 மீட்டர் தூரம் குண்டு எறிந்து இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.
  • ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில்  இந்திய வீரர் ஜி.லட்சுமணன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இவர் தமழகத்தை சேர்ந்தவராவார்.
  • ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர் விகாஸ் கவுடா வெண்கலம் , நீளம் தாண்டுதலில் நீனா வெள்ளிப்பதக்கம்,  நயன் ஜேம்ஸ் வெண்கலம், பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சஞ்ஜீவினி யாதவ் வெண்கலம், ஈட்டி எறிதலில் அனுராணி வெண்கலம்  வென்றுள்ளனர்.
  • இராக்கின் மோசூல் நகரிலுள்ள 840 வருடம் பழமை வாய்ந்த அல் நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்துள்ளனர்.
  • இந்தியா , அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் மலபார் பயிற்சி சென்னையை தலைமையிடமாக கொண்டு வங்காள விரிகுடாவில் ஜூலை 10 முதல் ஜூலை 17 வரை நடைபெறுகிறது.
  • தெலுங்கானா மாநில அரசின் Telangana Social Welfare Residential Educational Institutions Society (TSWREIS) சார்பில் ஹைதராபாத்தில் தலித் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.
  • யுனெஸ்கோ இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக அகமதாபாத்தை தேர்வு செய்துள்ளது .போலந்தில் நடைபெற்ற யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கமிட்டியின் 41வது கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • அணு ஆயுதங்களை தடைச் செய்யும் ஐ.நா.வின் சர்வதேச ஆயுத தடை ஒப்பந்தம் 122 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.நெதர்லாந்து எதிர்த்து வாக்களித்தது.சிங்கப்பூர் வாக்களிக்கவில்லை (abstaining).
  • அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், சீனா, பிரான்ஸ், பிரிட்டன், வடகொரியா, பாகிஸ்தான் ஆகியவை இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.
  • இங்கிலாந்தின் குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே ,பெண்ணாக பிறந்து, ஆணாக மாறிய திருநம்பி (ஹேடன் ராபர்ட் கிராஸ் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்) ஆவார்.இவர் தற்போது தானமாக பெற்ற விந்தணு மூலம் பெண் குழந்தையை பெற்றுள்ளார்.
  • ராணிந்தர் சிங் என்.ஆர்.ஆர்.ஐ தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • ராணிந்தர் சிங் மற்றொரு நான்கு ஆண்டு கால இந்தியாவின் தேசிய துப்பாக்கி சங்கத்தின் (NRAI) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • பிசிஏ மைதானம் வளாகத்தில் நடைபெற்ற தேர்தலில், சிங் 89-1 விளிம்புடன், உத்தரப் பிரதேசம் துப்பாக்கி சங்கத்தின் தலைவர் ஷியாம் சிங் யாதவை தோற்கடித்தார்.
  • பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர் சிங்கின் மகன் ரண்தேர் ஆவார்.
  • ஜான் ஜோசப் ஜி.எஸ்.டி உளவுத்துறையின் தலைமை பொறுப்பேற்றார்
  • சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) ஆகியவற்றைத் தவிர்த்தல் ஒரு முக்கிய உளவுத்துறை நிறுவனம் அதன் புதிய தலைவருக்கு கிடைத்துள்ளது.
  • இந்திய வருவாய் சேவை (சுங்கத்துறை மற்றும் மத்திய எக்ஸ்சைஸ்) 1983 பேட்ச் அதிகாரி ஜோசப், நிதி அமைச்சகத்தின் முக்கிய துறைகளில் பணியாற்றி வருகிறார், இதில் இயக்குநரகத்தின் வருவாய் நுண்ணறிவு (DRI) அடங்கும்.
  • டி.சி. ஜி.எஸ்.டி.ஐ என்பது, வரிச்சலுகை மற்றும் மத்திய எக்ஸ்சைஸின் கடமை ஏலத்தைச் சரிபார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்ட மத்திய எக்ஸ்சீசிஸ் இன்ஜினியரிங் (டி.ஜி.சி.ஐ.ஐ.) யின் இயக்குநரகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட புதிய பெயர்.
  • ஆர் ரஹ்மான் உலக ஒலிப்பதிவு விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • இரட்டை அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வைஸ்ராய் வீட்டின் உலக ஒலிப்பதிவு விருதுகளுக்கான பொது சாய்ஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 1947 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட வைசிராய் ஹவுஸ், குருந்த்தர் சாதா இயக்கியது, பார்ட்டியின் கதையைச் சுற்றியும், ஹுமா குரேஷி,  ஓம் பூரி, ஹக் போனிவில்வில், கில்லியன் ஆண்டர்சன் மற்றும் மைக்கேல் காம்பான் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • நேபால் எஸ்.பி.ஐ., முதல் காகிதமற்ற வங்கி சேவைகளை அறிமுகப்படுத்துகிறது
  • நேபாள தலைநகர் காத்மாண்டுவில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணை நிறுவனமான எஸ்.பி.ஐ.
  • இது இந்தியாவுக்கு வெளியில் எழுதப்படாத வங்கி முறையை விரிவுபடுத்திய முதல் முறையாகும்.
  • டிஜிட்டல் வங்கி பல்வேறு தொகையை வழங்கும், ரொக்க வைப்பு, புதிய கணக்குகளை திறத்தல், டெபிட் கார்டை விநியோகித்தல், ஏடிஎம் மற்றும் ஆன்லைனில் வங்கித் தகவல் திரையில் தொடுதலுடன் தொடர்புபடுத்தல்.
  • வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ. இன்டவுக் வங்கியிடமிருந்து சேவைகளைப் பெற முடியும்.
  • டிஜிட்டல் வங்கி பிரிவில் ஒரு ரோபோவும் உள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான தகவலை ஊடாடத்தக்க விதத்தில் வழங்குகிறது.
  • ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: சுபா சிங் பெண்கள் ஸ்டீப்பில்லாசில் தங்கம் வென்றார்
  • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் மூன்றாவது மற்றும் கடைசி நாள் போட்டியில் இந்தியாவின் 3000 மீட்டர் ஸ்டீப்பில்லேசன் போட்டியில் தங்கம் வென்றார்.
  • உத்தரபிரதேச ஒலிம்பிக் போட்டியில் 9 நிமிடம் 59.47 வினாடிகளில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை களிங்கா ஸ்டேடியத்தில் முன்னிலை வகித்தார்.
  • ஆண்கள் 110m தடைகளில் இந்தியாவின் சித்தார்த் திங்கலயா 13.72 வினாடிகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். குவைத் 13.69 மற்றும் 13.59 புள்ளிகளுடன், அப்துல்ஸியா அல்-மன்டில் மற்றும் யக்யுப் அல்-யூஹா ஆகிய இரண்டையும் தங்கம் மற்றும் வெள்ளி வென்றது.
  • இந்த தங்கத்துடன் இந்தியா தங்கம், தங்கம், வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
  • 15 ஆம் நூற்றாண்டில் சுல்தான் அஹ்மத் ஷா நிறுவிய அகமதாபாத் வால்ட் நகரம், இந்தியாவின் முதல் உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் கழகம் (WHC) போலந்து நாட்டின் க்ராக்வில் அறிவித்தது.
  • சுமார் 5.5 கி.மீ. பரப்பளவில் உள்ள நான்கு ஏறக்குறைய மக்கள் தொகை கொண்ட சுமார் 4 லட்சம் மக்கள், சுமார் 600 பாஸ் அல்லது சுற்றுப்புறங்களில் உள்ள நூற்றாண்டின் பழைய மர வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். யுனெஸ்கோ டில்லியிலும் மும்பையிலும் அகமதாபாத் விரும்பியது.
  • இப்போது பாரிஸ், கெய்ரோ, எடின்பர்க் மற்றும் துணைக் கண்டங்களில் உள்ள இரண்டு நகரங்கள், நேபாளத்தில் பக்்ப்பூர் மற்றும் இலங்கையில் காலி போன்ற பாரம்பரிய நகரங்களின் சலுகை பெற்ற கிளப் ஒன்றில் இப்போது இணைந்துள்ளது
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் உள்ள பேராசிரியர் நிம்மி ராமானுஜம் தனது ஆய்வுக்குழுவுடன் சேர்ந்து கருப்பை புற்று நோயை கண்டறியும் சிறிய சாதனத்தை உருவாக்கியுள்ளார். இந்த சாதனத்தின்  மூலம் வலி ஏதும் இல்லாமல் புற்று நோயை ஆய்வு செய்ய முடியும். ’பாக்கெட் சொல்போஸ்கோப் ’எனப்படும் இந்த சாதனத்தை லேப்டாப் அல்லது செல் போனில்  இணைத்து பெண்கள் தானாகவே தங்களை ஆய்வு செய்யலாம்.
  • *2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான தமிழ் திரைப்பட விருதுகளை அறிவித்தது தமிழக அரசு*
  • சிறந்த படங்கள் - தமிழக அரசு விருது
  • *2009 - பசங்க*
  • *2010 - மைனா*
  • *2011 - வாகை சூடவா*
  • *2012 -  வழக்கு 18/9*
  • *2013 - ராமானுஜன்*
  • *2014 - குற்றம் கடிதல்*
  • சிறந்த நடிகர் - தமிழக அரசு விருது
  • *2009 - கரண்*
  • *2010 - விக்ரம்*
  • *2011 - விமல்*
  • *2012 -  ஜீவா*
  • *2013 - ஆர்யா*
  • *2014 - சித்தார்த்*
  • சிறந்த காமெடியன் - தமிழக அரசு விருது
  • *2009 - கஞ்சா கருப்பு*
  • *2010 - தம்பிராமையா*
  • *2011 - மனோபாலா*
  • *2012 -  சூரி*
  • *2013 - சத்யன்*
  • *2014 - சிங்கமுத்து*
  • சிறந்த இயக்குநர் - தமிழக அரசு விருது
  • *2009- வசந்தபாலன்*
  • *2010- பிரபு சாலமன்*
  • *2011- ஏ.எல்.விஜய்*
  • *2012-  பாலாஜி சக்திவேல்*
  • *2013 - ராம்*
  • *2014 - ராகவன்*
  • சிறந்த நடிகை - தமிழக அரசு விருது
  • *2009 - பத்ம பிரியா*
  • *2010- அமலா பால்*
  • *2011- இனியா*
  • *2012 -  லட்சுமி மேனன்*
  • *2013 - நயன்தாரா*
  • *2014 - ஐஸ்வர்யா ராஜேஷ்*
  • சிறந்த பாடலாசிரியர்- தமிழக அரசு விருது
  • *2009 - யுகபாரதி*
  • *2010 - பிறைசூடன்*
  • *2011 - முத்துலிங்கம்*
  • *2012, 2013, 2014 -  நா. முத்துக்குமார்*
  • இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிசிசிஐ தரப்பில், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு, இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அவர்களை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தது. 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரை ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நீடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
  • இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜாகிர் கான் (38) நியமிக்கப்பட்டுள்ளார்.  இதுவரை 92 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • வெளிநாட்டுத் தொடர்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே இந்தியா ஏ அணி மற்றும் அண்டர் 19 அணிகளின் பயிற்சியாளராக இருக்கிறார். 164 டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் 13288 ரன்களும் 344 ஒருநாள் போட்டிகளில் இருந்து 164 ரன்களும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஜப்பானில் ஆண்கள் மட்டும் செல்லும் தீவுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம்
  • ஜப்பான் கிழக்கு கடலின் ஒகினோஷிமா பகுதியில் உள்ள இந்த தீவுக்கு குறிப்பிட்ட அளவிலான ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கினர்.
  • கோயிலுக்குச் செல்பவர்கள் ஆண்களாக இருக்க வேண்டும். இந்நிலையில் தீவுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • One Belt, One Road (OBOR) Initiative” எனும் மிகப்பெரிய சர்வதேச கடல்வழி போக்குவரத்து திட்டத்தின் மூலமாக இங்கிலாந்திலின் “எஸ்ஸெக்ஸ்” பகுதியுடன் முதல் சரக்கு கப்பல் போக்குவரத்தைத் துவங்கியுள்ள ஆசிய நாடு- "சீனா"
  • 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில், தேசிய அளவில், சிறந்த திரப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் ? கேஷவ்
  • சோம்பேறி நாடுகள் : இந்தியாவிற்கு 39வது இடம்
  • உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்து ஸ்டான்போர்ட் பல்கலை., சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இப்பட்டியலில் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 4297 அடி மட்டுமே நடக்கிறார்கள். 
  • அதிகபட்சமாக சீனர்கள் நாள் ஒன்றிற்கு 6880 அடிகள் நடக்கிறார்கள். மிக குறைந்த அளவாக இந்தோனேசிய மக்கள் 3513 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள். அமெரிக்கர்கள் 4774 அடிகள் நடக்கிறார்கள். 
  • மிக குறைவாக நடக்கும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா, சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
  • தொழில் தொடங்க சாதகமில்லாத மாநிலம் தமிழகம்
  • உரிமம் பெறும் நடைமுறைகள்,  சூழ்நிலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலை நிதி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் வெளியிட்டார். 
  • இந்தப் பட்டியலில் ஆந்திரம், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. தமிழ்நாடு, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
  • நாட்டிலேயே  முதன் முறையாக  கடலுக்கு  அடியில் அமைக்கப்படவுள்ள ரயில் நிலையம்  , எந்த  இரு நகரங்களுக்கிடையே தொடங்கப்பட உள்ளது - ஆமதாபாத் -மும்பை
  • 2017 பிரம்மபுத்திரா " இலக்கிய  திருவிழா நடைபெற்ற இந்திய  நகரம் - கவுகாத்தி
National Payments Corporation of India (NPCI)
  • NPCI தலைவர்  --  ஏ.பி.ஹோடா 
  • NPCI சார்பில் வெளியிடப்பட்டுள்ள RuPay பண அட்டைகள் பயன்பாட்டுக்கு வந்த நாள்  --  ஜூன் 15 / 2017 
  • முதற்கட்டமாக RuPay கடன் அட்டைகளை   பயன்படுத்தும் வங்கிகள்  - 8  { பொதுத்துறை வங்கிகள் - 6, கூட்டுறவு வங்கி - 1 , தனியார் வங்கி - 1 ( HDFC ) }
  • கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்ட வல்லுநர் ஆலோசனைக்குழு  உறுப்பினராக, ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் வாரிசான ராஜா குமரன் சேதுபதியின் மனைவி   ராணி N. லட்சுமி குமரன் சேதுபதியை  நியமித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
  • அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
  • நாடு முழுவதும் தேசிய , மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் மதுக்கடைகளை ஏப்ரல் 01 முதல் மூட பிறப்பிக்கப்பட்ட  உத்தரவில் இருந்து #அருணாச்சல_பிரதேசத்திற்கு விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  • ஏற்கனவே சிக்கிம், மேகாலயா , இமாச்சல பிரதேசம், அந்தமான் - நிகோபர் தீவுகள் ஆகியவை விலக்கு பெற்றுள்ளன. மேலும் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் 20,000க்கும் குறைவான மக்கள் தொகை உள்ள பகுதிக்கும் உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. [ உத்தரகாண்ட் மற்றும் கேரளா ஆகியவை விலக்கு அளிக்க கோரி மனு செய்துள்ளன. ]
  • உலக அளவில் அதிக முகநூல் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஏறத்தாழ 24.1 கோடி பேர் இந்தியாவில் முகநூலைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை அமெரிக்காவே முகநூல் பயன்பாட்டில் முன்னிலையில் இருந்து வந்து குறிப்பிடத்தக்கது.
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி) கடந்த 1961-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் 35க்கும் மேற்பட்டப நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக கொண்டுள்ளது இந்த அமைப்பு. அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அடிப்படையில் இந்த அமைப்பு நடத்திய ஆய்வில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 3 வது இடம் கிடைத்துள்ளது.
  •  வடகொரியாவிடம் முன்பு இருந்ததாகக் கருதியதை விட அதிகளவில் புளுட்டோனியம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆதரவில் செயல்படும் அணு ஆயுதக் கண்காணிப்பு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
  • ரஷியா 73 செயற்கைக்கோள்களை சனிக்கிழமை (ஜூலை 15) மதியம் 12.13 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சுமார் 8 மணி நேர பயணத்துக்குப் பிறகு அனைத்து செயற்கைக் கோள்களும் முன்னர் தீர்மானிக்கப்பட்ட அதனதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
  • அமெரிக்க எம்பிக்கள் 621.5 பில்லியன் டாலர் பாதுகாப்பு கொள்கை மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னெடுக்க முன்மொழிகிறது.
  • சோங்கிங் மாகாண கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக அரசியல் நட்சத்திரம் சென் மைனர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • விண்வெளி வீரர்கள் மற்றும் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோனாடிக்ஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 12ம் தேதி நடைபெற்றது. இதில் நாசா போதிய நிதி ஆதாரம் இல்லாததால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முடியாது என ஒப்புக் கொண்டுள்ளது.
  • துருக்கியில் ராணுவ வீரர்கள், காவல் துறையினர் உள்பட 7563 பேரைப் பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.
  • உலக இளைஞர்கள் திறன் மேம்பாடு தினம் ஜூலை 15ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உத்திரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் 70 லட்சம் வேiலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார்.
  • காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் ஆசிய பசிபிக் பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தென் இந்தியாவில் வரும் 2030 ஆம் ஆண்டுகளில் நெல் விளைச்சல் வீழ்ச்சியடையும் எனவும் புதிய ஆற்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
  • மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்;புகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த இணைப்புகளையும் சேர்த்து இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 2.5 கோடியாக உயர்ந்துள்ளது.
  • சரக்கு – சேவை வரிவிதிப்பின் கீழ் வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தகர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
  • எதிர்காலத்தில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவுக்கும் ஒரு கடவுச்சீட்டு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் கூறினார்.
  • மத்திய அமைச்சரவைச் செயலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த அரசு அதிகாரி நரேஷ் சந்திர சேக்ஸேனா (82) ஐஏஎஸ் மறைந்து விட்டார். இவர் வௌ;வேறு துறைகளில் முக்கியப் பதவிகளை வகித்தவர். ஒன்பது பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.
  • நாட்டின் 14வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. தேர்தல் முடிவு 20ம் தேதி வெளியாகும்.
  • கனடா நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணாண லில்லி சிங் யூனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு தொடர்பான வழக்குகளில் மாநில அரசின் சார்பில் ஆஜராகி வாதாடுவதற்காக எம்.யோகேஷ் கன்னா, கே.வி.விஜயகுமார், டிஆர்பி. சிவகுமார் ஆகிய 3 பேர் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
  • பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சுந்தர்சிங் குர்ஜார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 2017 பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்தவர் என்ற பெருமையை பெறுகிறார்.
  • 5வது சீசன் புரோ கபடிப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவள்ளுவர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதற்கு பிசிசிஐ நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
  • விக்டோரியா ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் சாந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
  • ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் தொழில் துவங்குவதற்கும் உரிய ஆலோசனைகளை வழங்க ‘ஐ.எப்.எம்’ என்ற தனிஅமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • மூக்கு கண்ணாடி கடைகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மத்திய சுகாதாரம அமைச்சகம் தனிகுழுவை அமைத்துள்ளது.
  • ஐசிஐசிஐ லோம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 19 சதவீத பங்குகளை பொதுப்பங்கு வெளியீடு வாயிலாக விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையமாக செபியிடம் விண்ணப்பித்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
  • மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 32000 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்டி வரலாறு சாதனை படைத்தது.
  • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 1.4 சதவீதம் உயர்ந்து ரூ 3843 கோடியாக இருக்கிறது.
  • பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் இருக்க வேண்டும் என 2014ம் ஆண்டில் பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி விதியை உருவாக்கியது.
  • ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் எண்ணெய் கிணறு அமைக்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எண்ணெய் கிணறு அமைப்பதால் அங்குள்ள இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் இன்னும் அதிகமான ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவின் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்டன் மான்செல் கூறியுள்ளார்.
  • லக அளவில் அதிக முகநூல் பயன்பட்டாளர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஏறத்தாழ 24.1 கோடி பேர் இந்தியாவில் முகநூலைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இத்தாலியின் மிகப்பெரிய எரிமலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ புகையில் அரக்கன் போன்ற உருவம் தோன்றியது. 
  • ஆமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரான் லிபியா சோமாலியா சூடான் சிரியா மற்றும் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார்.
  • காஷ்மீர் தொடர்பாக நிலவும் பிரச்சனையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார்.
  • அமெரிக்காவுக்குள் மெக்ஸிக்கோ அகதிகள் வருவதை தடுக்க சூரிய மின்சக்தி சுவர் அமைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
  • வடகொரியா மீது ஐ.நா சபை மேலும் தடைகளை கொண்டு வந்தால் அவற்றை எதிர் நடவடிக்கைகள் மூலம் சந்திப்போம் என்று அந்நாடு அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • சிங்கப்பூரில் 15 கிராமங்களுக்கு அதிகமாக ‘டயாமார்பின்’ போதைப்பொருளை கடத்திய தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட பிரபாகரன் ஸ்ரீவிஜயன் என்ற வாலிபர் அந்நாட்டு போலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார் இந்நிலையில் நேற்று  சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் அவர் தூக்கில் போடப்பட்டார். முரண தண்டனை விதிக்க அந்த நாட்டு சட்டம் வழி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • மிசோரம் மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு அலவசமாக மழை நீர் சேகரிப்புத் தொட்டி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
  • பருவ மழைக் காரணமாக இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில்; காஸிரங்கா தேசிய வன உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இங்குள்ள வன விலங்குகள் வெள்ளத்தில் போராடி வருகின்றன என தகவல்கள் வெளியாகின.
  • இரயில்வே சேவைக்களுக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இரயிலில் பயணிக்கும் போதே உணவு வகைகளைப் பெறுவது மற்றும் துப்புரவு பணிகளுக்கான  ஒருங்கிணைந்த புதிய செயலியை “ரயில் சாரதி” என்ற ஆப்யை இரயில்வேத் துறை அமைச்சர் நேற்று தில்லியில் தொடங்கி தொடங்கிவைத்தார்.
  • சூரிய மின்சக்தியுடன் கூடிய இரயில் சேவையை இரயில்வேத்துறை  தில்லியில் அறிமுகம் செய்தது.
  • சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் - 2017(ஜிஎஸ்டி) குறித்த டிப்ளமோ படிப்பு வணிகவியல் துறையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
  • உத்திரப் பிரதேச மாநில அரசின் 4 விவசாயப் பல்கலைக்கழகங்களில் 43 சதவீதம் மாணவர் சேர்க்கை நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி கூஙியுள்ளார்.
  • தமிழக்கத்தில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் புகழ் பெற்ற சங்ககால பெண்புலவரான ஒளவையாரின் சிலையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் திறந்து வைத்தார்.
  • விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் சாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளர்.
  • தமிழ்நாடு கைப்பந்து சங்கம் மற்றும் சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில பள்ளி கைப்பந்து போட்டி வருகிற ஆகஸ்ட் 17ந் தேதி முதல் 20ம் தேதி வரை சேலத்தில் நடைபெற உள்ளது. இதில் எல்லா பள்ளி அணிகளும் கலந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
  • ஹட்கோ கோல் இந்தியா ஹிந்துஸ்தான் காப்பர் போன்ற ஆறு நிறுவனங்களில் மத்திய அரசின் பங்கு 75 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. சரியான நேரத்தில் இந்த நிறுவனங்களின் பங்குகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
  • பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்தனர். இதில் 5.56 லட்சம் நபர்கள் டெபாசிட் செய்த தொகைக்கும் அவர்கள் வருமானத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதற்கான தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக  வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
  • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 1.4 சதவீதம் உயர்ந்து ரூ.3843 கோடியாக உயர்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணையதளம் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்கள் இனி 75 சதவீதம் அளவுக்குக் குறைவான கட்டணம் செலுத்தினால் போதும் என்று எஸ்பிஐ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
  • பங்கு சந்தையில் திடீர் சரிவு.மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 16 புள்ளிகளை இழந்து 32020 புள்ளிகள் உள்ளது.
  • நாட்டின் பணவீக்கம் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு சென்ற ஜுன் மாதத்தில் 0.90 சதவீதமாக சரிந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • சென்னையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ ரூ.66 க்கும் சின்ன வெங்காயம் ரூ.45க்கும் விற்பனை செய்யப்படுவதால் அங்கு பொது மக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
  • சீனாவை இலக்காக இந்தியா தனது அணு ஆயுதங்களை நவீனமாக்கி வருகிறது என அமெரிக்க நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்
  • சூரியனின் மேற்பரப்பில்; பெரிய கருந்துளைகள் தோன்றுகின்றன. 
  • உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 39 வது இடத்தை பிடித்துள்ளது.
  • சீனாவின் மனித உரிமைப் போராளி ‘லியு-ஷியாவ்போ’ - புற்றுநோயால் மரணம். 
  • சவூதியில் பெண்களுக்கு எதிரான கட்டுபாட்டுகள் அதிகமாக நிகழ்கின்றன. அரேபியப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவது தற்போது தான் அறிமுகம் செய்யப்படுகிறது. அதுவும் ஷரியா மதக்கோட்பாடுகளுக்கு உட்பட்டே இருக்கும் என்று அந்நாட்டு கல்வித்துறை அறிவித்துள்ளது.
  • பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் ‘செயற்கை நுண்ணறிவு’ முறையில் செயல்படும் புதிய ‘ஆப்’ (சீயிங் ஏஐ) மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்வுள்ளது.
  • இத்தாலிக்கு அகதிகள் அதிக அளவில் வருவதால் பெரும் நெருக்கடி ஏற்படுவதாகவும்  அகதிகளை ஏற்கும் விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் பாலோ ஜென்டிலோனி தெரிவித்துள்ளார்.
  • அமெரிக்க அதிபர் டெனொல்ட் டிரம்ப்பின் தீவிர ரசிகர் ஒருவர் வங்கதேசத்தில் தான் ஆரம்பித்த புதிய உணவகத்திற்கு டிரம்ப்பின் பெயரை வைத்துள்ளார். இச்செய்தி அந்நாட்டு மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • காஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் தலையீடு தேவையில்லை என்று இந்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
  • நாடு முழுவதும் அரசுக்கு எதிராக 135060 வழக்குகள்; பதிவாகியுள்ளன. இதில் 369 வழக்குகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் என்று மத்திய சட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • ஆளும் அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம்.
  • பிரதமர் நரேந்திர மோடியை இன்னொரு மகாத்மா காந்தியாக பார்க்கிறேன் என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
  • அஞ்சல் துறையின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளை கவரும் விதமாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உருவம் பதிக்கப்பட்ட லேபிள் வெளியிடப்பட்டுள்ளது.
  • 20 மில்லியன் அதிகமான சூரிய ஒளி போன்ற பெரிய விண்மீன் கூட்டத்தைஇந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்;. தற்போது அவ்விண்மீன் கூட்டத்திற்கு சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளனர்.
  • கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் என்று பசுமை தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது.
  • பெண்களுக்கான மருத்துவ அட்டைகள் : ஆதார் அட்டையுடன் இணைந்த மருத்துவ அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • 2015 அம் ஆண்டு எழுந்த சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை இன்றுடன் நிறைவடைகிறது.
  • சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று மாநில கைப்பந்து போட்டி தொடங்குகிறது. இப்போட்டி வருகிற 16ந் தேதி வரைக்கும் நடைபெறும்.
  • இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருணை நியமிப்பதற்காக தீவிர முயற்சி காட்டி வருகிறார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
  • மகளிர் கிரிக்கெட் போட்டியில் சாதித்துக் காட்டிய இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாவார்.
  • சர்வதேச சந்தையில் டிசிஸ் நிறுவனம் வளர்ச்சி கண்டு வருவதாக அந்நிறுவன இயக்குனர் ராஜேஷ் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
  • மும்பை பங்கு சந்தையில் நடைப்பெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 32000 புள்ளிகளை கடந்து புதிய சாதனைப் படைத்தது.
  • நாட்டின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 6 சதவீதம் சரிந்திருக்கிறது.
  • கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உள்ள அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
  • ஜிஎஸ்டி வரி விதிப்பை காரணம் காட்டி கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு ரூ.60 கூடுதல் கட்டணம் பொதுமக்களிடையே வசூலிக்கப்பட்டது.
  • வகுப்பு வாரிய நிர்வாக மானியம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.
  • சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி.
  • நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு.
  • தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்.
  • AP govt issued family pension GO 121 for CPS employees. With this GO dependents of CPS will get pension
  • வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள்
  • அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதைக் குறைத்து வருகின்றன. மேலும், செயல்திறன் அடிப்படையில் கட்டாய பணிவிடுப்பையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.
  • 7 PAY COMMISSION : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல்.
  • 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்
  • 1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு: சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் - நேர்முகத் தேர்வை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.
  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான, வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
  • இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து கண்காணிப்பாளர் பதவிக்கு பணி மாறுதல் பெயர் பட்டியல் மற்றும் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
  • காங்கேயம் இன நாட்டு மாடுகளை மரபு வழியில் மீட்டெடுத்து பாதுகாக்க ரூ.2.5 கோடி செலவில் சத்தியமங்கலத்தில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • ஆசியா – பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த 16 நாடுகளின் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ( RECP ) ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
  • நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற டச்சு ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் – 2017 போட்டியின் ,15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் பிரிவில் இந்தியாவின் நீல் ஜோஷி மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில் இந்தியாவின் அனன்யா டப்கே சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
  • மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளராக இருந்த கோபல் பக்லே பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, அப்பொறுப்புக்கு ராவீஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel