Type Here to Get Search Results !

சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு - 2011


  • 1931-ம் ஆண்டுக்குப் பிறகு மதம், இனம், சாதி, பொருளாதார அளவீடுகள், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவே.
  • நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தியாவில், 24.39 கோடி வீடுகள் உள்ளன.
  • கிராமங்களில் 17.91 கோடி வீடுகள் உள்ளன.
  • இந்த வீடுகளில் 10.69 கோடி வீடுகள் பின்தங்கியவையாக கருதப்படுகின்றன.
  • ஊரகப் பகுதியில் உள்ள 5.37 கோடி வீடுகளில் வசிப்பவர்கள் 29.97% நிலமற்றவர்கள். இவர்கள் கூலி வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • 2.37 கோடி குடும்பங்கள் ஓர் அறை உள்ள கச்சா வீடுகளில் வசிக்கின்றனர்.
  • எஸ்.சி. எஸ்.டி பிரிவைச் சேரந்த 3.86 கோடி குடும்பத்தினர் கிராமங்களில் வசிக்கின்றனர்.
  • ஊரகப் பகுதியில் வசிக்கும் 4.6 கோடி குடும்பத்தினர் வருமான வரி செலுத்துகின்றனர். ( இவர்களில் 10 சதவீதத்தினர் மாதாந்திர ஊதியம் பெறுகின்றனர்.)
  • 3.49 சதவீத எஸ்.சி.க்களும், 3.34 சதவீத எஸ்.டி. பிரிவினரும் வருமான வரி செலுத்துகின்றனர்.
  • 9.16 கோடி குடும்பத்தினர் உடலுழைப்பு தொழிலின் மூலமே வருவாய் ஈட்டுகின்றர். இது 51.14 சதவீதம் ஆகும்.
  • 30.10 சதவீதத்தினர் வேளாண்மை மூலம் வருவாய் ஈட்டுகின்றனர்.
  • தனியார், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதன் மூலம் 2.5 கோடி குடும்பத்தினர் வருவாய் ஈட்டுகின்றனர்.
  • கிராமப்புறங்களில் வசிக்கும் 23.52 சதவீத குடும்பங்களில், 25 வயதுக்கு மேல் படித்தவர்கள் ஒருவர் கூட இல்லை.
  • நாட்டில் சராசரியாக 68.35 % கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்கள் செல்போன்களைப் பயன்படுத்துகின்றன.
  • உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 86.60 % குடும்பங்கள் செல்ப்போன்களை பயன்படுத்துகின்றன.
  • கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களில் 1% குடும்பங்களில் மட்டுமே தரைவழி தொலைபேசி இணைப்பு உள்ளது.
  • கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களில் 28% குடும்பங்களில் செல்போன் அல்லது தரைவழி தொலைபேசி இணைப்பு இரண்டுமே கிடையாது.
  • நக்ஸல் பாதிப்புகள் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் குடும்பங்கள் 28.47 % உள்ளது.
  • குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்தும் கிராமப்புற குடும்பங்கள் 11.04 சதவீதமாக உள்ளது. இதில், 69.37 சதவீதத்துடன் கோவா மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
  • நாட்டில் வசிக்கும் 20.69 சதவீத குடும்பங்களில், சொந்தமாக மோட்டார் வாகனங்கள் உள்ளன.
  • நாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் 18.06 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில், 17,332 தொழிலாளர்களுடன் திரிபுரா முதலிடத்தில் உள்ளது
  • கிராமப்புற மக்களில் 36 % பேர் படிப்பறிவற்றவர்களாக உள்ளனர். ராஜஸ்தான் 47.58 %., மத்திய பிரதேசம் 44.19 %., பீகார்43.85 % பேர் கல்வியறிவு பெறவில்லை.
  • கிராமப்புற மக்களில் கேரளா 88.62 %, டெல்லி 86.42 %, கோவா 84.58 % பேர் படிப்பறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
  • ஒட்டுமொத்த இந்திய அளவில் 0.12 % கிராமப்புற திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது. இதில் மிசோரம் மாநிலத்தில் 1.08 % கிராமப்புற திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது.
  • இந்தியஅளவில் 8 % கிராமப்புற குடும்பங்கள் மட்டுமே மாதம் ரூ10,000 /க்கு அதிகமாக வருமானம் ஈட்டுகின்றன.
  • 10 % கிராமப்புற குடும்பங்கள் மட்டுமே மாதாந்திர ஊதியம் பெறும் வேலையில் உள்ளனர்.
  • கிராமப்புற குடும்பங்களில் சராசரியாக 5 …( 4.93 ) நபர்கள் வசிக்கின்றனர். அதிகபட்சமாக உ.பி.யில்6.26 நபர்களும், குறைவானதாக ஆந்திராவில் 3.86 நபர்களும் வாழ்கின்றனர்.
  • கிராமப்புற வீடுகளில், இந்திய அளவில் 87 % குடும்பங்கள் ஆண்களாலும், 13 % குடும்பங்கள் பெண்களாலும் நிர்வகிக்கப்படுகிறது.
  • ராஜஸ்தானில் 91 % குடும்பங்கள் ஆண்களாலும், கேரளாவில் 26 % குடும்பங்கள் பெண்களாலும் நிர்வகிக்கப்படுகிறது.
  • கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களில் திருமண வயதை அடைந்த 41.46 % பேர் இன்னும் திருமணம் ஆகாமல் உள்ளனர். இதில் நாகலாந்தில் மிக அதிகபட்சமாக 56 % பேர் இன்னும் திருமணம் ஆகாமல் உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel