Type Here to Get Search Results !

TNPSC SHOUTERS CURRENTS AFFAIRS AND GK QUESTIONS APRIL 2017 IN TAMIL

TNPSC IMPORTANT CURRENT AFFAIRS   IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS   STUDY MATERIALS   MODEL QUESTIONS 
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS   PDF,
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS   STUDY MATERIALS  MODEL QUESTIONS,
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS     GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS    GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS    GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS    GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS    VAO    MATERIALS  MODEL QUESTIONS ,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப்-2A/ குருப்2/ VAO/குருப்4 - நடப்பு நிகழ்வு -APRIL -2017

 

GOOGLE DRIVE PDF LINK WILL be AVAILABLE 





  • இந்தியாவில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் சீசனில் சிறந்த வீரராக ரவீந்திர ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளது ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ கிரிக்கெட் இணையதளம்.வாசகர்கள் மற்றும் மஞ்சுரேக்கர், அஜித் அகார்கர், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் அடங்கிய நிபுணர்கள் குழு கடந்த 13 டெஸ்ட்களை முன்வைத்து இந்தத் தேர்வைச் செய்துள்ளனர்.இந்த சீசனில் ஜடேஜா பந்து வீச்சில் 22.83 என்ற சராசரி வைத்துள்ளார், பேட்டிங்கில் இவரது சராசரி 42.76. 20,500 வாக்குகளில் 65% வாசகர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். நிபுணர்கள் குழுவிலும் ஜடேஜாவுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ சீசன் விருதுகள்:
  1. சிறந்த வீரர்: ஜடேஜா
  2. சிறந்த இன்னிங்ஸ்: ஸ்டீவன் ஸ்மித் பெங்களூரில் புனேயில் எடுத்த 109 ரன்கள்
  3. சிறந்த பந்து வீச்சு: நேதன் லயன் (பெங்களூருவில் முதல் இன்னிங்ஸில் 50 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்)
  4. சிறந்த உறுதுணை வீரர்: உமேஷ் யாதவ்
  5. சிறந்த டெஸ்ட் போட்டி: பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட்
  6. சிறந்த அறிமுக வீரர்: ஹசீப் ஹமீத் (இங்கிலாந்து தொடக்க வீரர்)
  7. வருகை தந்த அணியில் சிறந்த வீரர்: ஸ்டீவ் ஸ்மித்.
  • ஊக்க மருந்து தடை விதிமீறல் பட்டியலில் இந்தியா 3-வது ஆண்டாக 3-ம் இடம்.சர்வதேச ஊக்கமருந்து தடுப்புக் கழகத்தின் 2015-ம் ஆண்டுக்கான ஊக்க மருந்து தடை விதிமீறல் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது ஆண்டாக 3-ம் இடம்பெற்றுள்ளது.2015-ம் ஆண்டில் மட்டும் 117 இந்திய வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பட்டியலில் ரஷ்யா முதலிடம் (176), இத்தாலி (129) இரண்டம் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. 2013, 2014ம் ஆண்டு பட்டியலிலும் இதே நிலை இருந்தது. தனிநபர் விளையாட்டுகளில் பளுதூக்குதல் பிரிவில் மட்டும் 32 இந்திய ஆடவர் 24 மகளிர் வீரர் விராங்கனைகள் என்று 56 பேர் தடை செய்யப்பட்டுள்ளனர். தடகளம் 21 மீறல்களுடன் 2-ம் இடம் வகிக்கிறது. குத்துச்சண்டையில் 8 வீரர்கள் ஊக்க மருந்தில் சிக்கினர், சைக்கிளிங், கபடி, ஆகியவற்றில் தலா 3 வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினர். மொத்தம் 229,412 மாதிரிகள் சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு கழகத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
  • குஜராத் மாநிலத்தின் முதல் பெண் டிஜிபியாக கீதா ஜோஹ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • Railwire Saathi திட்டத்தின் கீழ்  500இலவச வைபை ஹாட்ஸபாட் மையங்களை அமைக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
  • 2017_அலைச்சறுக்கு போட்டிகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள சசிதித்லு கடற்கரையில் துவங்கியுள்ளது..
  • பணபரிமாற்றவசதிக்காக 811 என்ற மொபைல் செயலியை கோட்டக் மஹிந்திர வங்கி அறிமுகம் செய்துள்ளது.
  • ஏப்ரல் 14அன்று நடக்க உள்ள சர்வதேச சான்பிரான்சிஸ்கோ திரைப்பட திருவிழாவில் ஷாருக் கான் சிறப்பு அழைப்பாளராக கௌரவிக்கப்பட உள்ளார்.
  • வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பும் வசதியை போல டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பணம் பரிமாறிக் கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
  • கதிரவனைப் போல் 10,000 மடங்கு அதிக ஒளி& ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜெர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதற்கு சின்லைட் என்று பெயரிட்டுள்ளனர்.
  • காடுகள் பற்றிய காமன்வெல்த் நாடுகளுக்கான கருத்தரங்க கூட்டத்தொடர் டேராடூனில் துவங்கியுள்ளது.
  • காமன்வெல்த் பட்டியலில் மொத்தம் 39நாடுகள் உறுப்பு நாடுகளாக  உள்ளன.உலக காமன்வெல்த் தினம் = மே24.
  • உத்திர பிரதேச மாநிலத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தனி தொடக்க பள்ளி தேர்வு வாரியம்(Primary Education Selection Board) ஒன்றை உருவாக்கியுள்ளது.
  • Pradhan Mantiri Ujjwala Yojana திட்டத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது.
  • கப்பற்படைக்காக ரூ 860 கோடி அளவிற்கு தரையிலிருந்து விண்ணைத் தாக்கும்(Surface to Air) "BARAK" ஏவுகணைகளை வாங்க பாதுகாப்பு கையகப்படுத்துதல் குழு(Defence Acquisition Council) பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • திருச்சியில் நிரந்தர IIM அமைக்க உள்ளதை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைப்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.- IIM- Indian Institiute of Management.
  • 52வது ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின்(African Development Bank-AfDB) வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது.
  • மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் செலவினத் துறையின்(Expenditure) முதன்நிலை ஆலோசகராக "Aruna Sethi" நியமிக்கப்பட்டுள்ளார்.
  • RBIன் துணை ஆளுநராக "B P Kanungo" பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • இந்த ஆண்டிற்கான "Golden Peacock National Quality Award" "L&T Techonlogy Services" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2016ம் ஆண்டிற்கான "Asian Squash Federation Coach-of-the-year award"ற்கு இந்திய தலைமை squash பயிற்சியாளர் "Cyrus Poncha" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 44கிமீ "Deoghar-Basukinath Solar Street Project" குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் தொடங்கப்பட்டது.
  • பிரபால இந்துஸ்தானி பாடகி "Kishori Amonkar" தனது 84 வயதில் காலாமானார்.
  • 2016-2017ம் ஆண்டி நிதியாண்டில் இந்தியாவின் காற்றாலை உற்பத்தி 5400MW ஆகும்.- நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 4000MW.- கடந்த நிதியாண்டில் 3423MW ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இமாச்சல பிரதேச அரசு பொதுப் பணியாளர் தேர்ளாணையம்(HPPSC) அனைத்து அலுவல் பணிகளையும் கணினி மையமாக்கி(Paperless) நாட்டின் முதல் e-governance மாநில தேர்வாணையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
  • கொல்கத்தாவின் முதல் Bio-gas பேருந்து சேவை ஒரு ரூபாய் கட்டணத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவைச் சேர்ந்த 76 வயது "Sujoy Guha"  ஆண்கள் கருத்தடை முறையை(Contraceptive) கண்டுபிடித்துள்ளார்.
  • கடந்த 2016-2017ம் ஆண்டு நிதியாண்டில் நேரடி மற்றும் மறைமுக வரிகளின் வசூல் 18%த்தை தாண்டியுள்ளது.கடந்த 6 ஆண்டுகளில் இதுவே அதிகமான வசூலாகும்.
  • மலையாள மொழி எழுத்தளரான மனோஜ் குருர் எழுதிய நிலம்புது மலரன்ன என்னும் நாவலை தமிழில் நிலம்புது மலர்ந்த நாள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது . மொழிபெயர்த்தவர்= கே.வி.ஜெயஸ்ரீ 
  • [சங்க காலம் பற்றிய நாவல்]-சம்ப்ரான் சத்யாகிரகா[ஏப்ரல்-17-1917]  நூற்றாண்டு விழா பீகாரில் வரும் 17ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது.
  • Mr and Mrs Jinna என்ற புத்தகத்தின் ஆசி= ஷீலா ரெட்டி.
  • 2017_ World Press Freedom விருது டேவிட் ஐசக் என்பவருக்கு வழங்க உள்ளது
  • கிரிக்கெட்வீரர் சச்சின் டெண்டுல்கர் பாடகர் சோனு நிகமுடன் இணைந்து Cricket Wali Beat என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
  • கல்ஃப் ஆயில் நிறுவன சி.இ.ஓ. ஆனார் தோனி!-கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.தோனியைக் கவுரவிக்கும் வகையில் அவருக்கு இப்பதவியை அளித்துள்ளது கல்ஃப் ஆயில் நிறுவனம்.இதையொட்டி, சமூக வலைத்தளத்தில் தோனிக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன!
  • கூகுள்நிறுவனம் நடத்திய இந்த ஆண்டிற்கான டூடூள் 4 கூகுள் நடத்திய போட்டியில் சாரா ஹரிசன் வெற்றி பெற்றுள்ளார்.
  • கேரளாவில் உள்ள கண்ணனூர் மாவட்டம் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழித்த முதல் மாவட்டம் என்ற பெருமைமை பெற்றுள்ளது.
  • ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் தகவல் தொழில்நுட்பம் & பஞ்சாயத்து துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.,
  • கூகுள்நிறுவனம் நடத்திய இந்த ஆண்டிற்கான டூடூள் 4 கூகுள் நடத்திய போட்டியில் சாரா ஹரிசன் வெற்றி பெற்றுள்ளார்.
  • வெவ்வேறு மாநகராட்சி மன்றங்கள் அனைத்தும் நேரடிதொடர்பில் இருக்க மத்திய பிரதேச மாநிலம் MP e-Nagarpalika என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் க்ரண்ட் எல்லியட்ஸ் அறிவித்துள்ளார்.
  • இந்தியா மற்றும் ஐ.நா சபைக்கான நிரந்தரபிரதிநிதி மற்றும் தூதராக ராஜீவ் குமார் சந்தர் நியமனம்.
  • கம்போடியாவிற்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்ற வெளிநாட்டு தம்பதிகள், அந்த குழந்தைகளை கொண்டு செல்வதற்கு கம்போடிய அரசு அனுமதி அளிக்க உள்ளது.
  • பிரேசில் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான நெய்மர் பார்சிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்துள்ளார்.
  • அமெரிக்காவின் பஸ்நெட் இணையதளம் உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாப் பாடகியும் நடிகையுமான பியான்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா பிடித்துள்ளார்.
  • புதிய எம்-3 எனப்படும் வாக்குப்பதிவின் போது முறைகேடு செய்தால் தானாகவே நின்று விடும் அடுத்த தலைமுறை வாக்கு இயந்திரங்களை 2018 க்குள் வாங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக 9,200 கோடி ரூபாய் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தேச திட்டத்திற்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.ரிசர்வ் வங்கி ஆளுநரின் மாத அடிப்படை சம்பளமத் #90,000 ரூபாயாக இருந்து வந்தது. இந்த நிலையில் அவரது சம்பளத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி இனி மேல் ரிசர்வ் வங்கி ஆளுநரின் மாத அடிப்படை சம்பளம் #2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதே போன்று துணை ஆளுநர்களின் சம்பளம் #80,000 ரூபாயில் இருந்து #2 லட்சத்து 25,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த சம்பள உயர்வு கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • Insolvency and Bankruptcy Board of India வின் முழுநேர உறுப்பினராக நவ்ரங் சைனி நியமனம்.
  • வாய் மற்றும் பாதங்களில் ஏற்படும் நோய்தடுப்பிற்கான மையம் சர்வதேச அளவில் முதன்முறையாக ஒடிஷா மாநிலத்தில் அர்குல் என்ற இடத்தில் அமைய உள்ளது.
  • புதிய வளர்ச்சி வங்கியின் வருடாந்திரகூட்டத் தொடர் டெல்லியில் நடைபெற்றது.
  • ராணுவத் தொழில் நுட்ப வசதிக்காக இந்திய ராணுவம் ஐஐடி சென்னையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
  • பாராளுமன்ற ஒன்றியங்களுக்கு இடையேயான 136வது கூடுகை வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.
  • நாட்டின் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் முதல் 12 இடத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.
  1. லயோலா (2)
  2. பிஷப்ஹீபர் (4),
  3. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி (10)
  4. பி.எஸ்.ஜி கல்லூரி (11)
  5. மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி (12
  • உலக ஆட்டிஸ விழிப்புணர்வு தினம்(ஏப்ரல்-2) அன்று பாரம்பரிய சின்னமான குதுப்மினார் நீலநிறத்தில் ஒளியுட்டப்பட்டது.
  • ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • ஜம்மு  - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில்(NH44) செனானி - நாஷ்ரி இடையே 9.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையில், நவீன வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சுரங்கப் பாதையைப் பயன்படுத்துவதன் மூலம், ஜம்மு - ஸ்ரீநகர். இடையேயான தூரத்தில் 31 கிலோ மீட்டர் குறையும் என்றும், இதன் காரணமாக நாளொன்றுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படுத்த முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
  • வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மூத்த குடிமக்களுக்கு காதுகேட்கும் கருவிகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்குவதற்கான ராஷ்ட்ரீய வயோஸ்ரீ யோஜனா திட்டம் ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் துவங்கப்பட்டுள்ளது.
  • South Asia Subregional Economic Cooperation (SASEC) வின்ஏழாவது உறுப்பு நாடாக மையன்மர் இணைந்துள்ளது.
  • ஒடிஷா மாநிலம் உருவான தினமான ஏப்ரல் 1அன்று 81வது உத்கல் திவாஸ்அம்மாநிலத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.
  • அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டுவிழாவை முன்னிட்டு ரூ150,ரூ5 கொண்ட நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
  • உதய் திட்டத்தில் 27மாநிலமாக மிசோரம் இணைந்துள்ளது.
  • ஆர்பிஐ கவர்னர்களின் சம்பளம் 2,50,000 & துணைநிலை ஆளுநர்களின் சம்பளம் 2,25,000 என உயர்த்தப்பட்டுள்ளது.
  • நோபல் பரிசை பெற்று கொண்டார் பாப் டிலன்!.-கடந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்கு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப் டிலன் தேர்வு செய்யப்பட்டார்.ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை.அப்போது, இசை சுற்றுப்பயணத்திற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றார்இந்நிலையில், நேற்று ஸ்டாக்ஹோம் நகருக்கு வந்த அவர், நோபல் பரிசுக்கான பதக்கத்தையும், பாராட்டு பட்டயத்தையும் பெற்று கொண்டார்.
  • MiamiOpen டென்னிஸ் போட்டியில் "Roger Federer" சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.-  இந்த ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களில் இவர் வெல்லும் மூன்றாவது பட்டம் இதுவாகும் #AustralianOpen #IndianWellsMasters
  • இந்தியாவில் Arsenic இரசாயனத்தால் பாதிப்படைந்த மக்கள் அதிகம் வாழும் மாநிலம் = மேற்கு வங்கம்.
  • A Gift of Goddess Lakshmi என்ற புத்தகத்தின் ஆசி= மனாபி  பாந்த்யோபத்யாய் (திருநங்கை).
  • ஜி – 20  நிதி அமைச்சர்கள் சந்திப்பு 2017ல் நடந்தஇடம் = பேடன்-பேடன்,ஜெர்மனி.
  • மத்திய ஆசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையத்திற்கான விருதினைப் வென்ற விமான நிலையம் =கெம்பகவ்டா,பெங்களூர்.
  • டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வேகமாக 100-டெஸ்ட் போட்டிகளை கடந்த நாடு=வங்கதேசம்.
  • The Book Of Indian Dogs என்ற புத்தகத்தின் ஆசி= தியோடர் பாஸ்கரன்.
  • பணமதிப்புநீக்கத்தை பற்றி சன்யோத் என்ற ஆவணப்படத்தை இயக்கியவர்= சுவேந்து கோஷ், கொல்கத்தா (சன்யோத்=வெறுமை).
  • ஐரோப்பிய யூனியனுக்கான பிரிட்டன் தூதர் = டிம் பாரோ**.
  • உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
  • அதிபர் டிரம்பின் உதவியாளராக மகள் இவான்கா:-அமெரிக்க அதிபரின் உதவியாளர் என்ற நிலையில் ஊதியம் வழங்கப்படாத பணியாளராக #இவான்கா டிரம்ப் தன்னுடைய தந்தையின் நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது
  • இ-மெயிலை கண்டுபிடித்த தமிழர் அமெரிக்க தேர்தலில் போட்டி!-தன் 7 வயதில் அமெரிக்கா சென்ற சிவா அய்யாதுரை, 1978ல் தன் 14வது வயதில் இ-மெயிலைக் கண்டுபிடித்தார்.அவர் அமெரிக்க செனட் சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள சிவா, தற்போது 'சைட்டோசால்வ்' நிறுவனத்தின் தலைவராக உள்ளார்!.
  • ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் கண்காட்சி காஷ்மீரில் துவங்க உள்ளது.
  • மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள "Kanha Tiger Reserve" நாட்டில் முதன்முறையாக புலிகள் காப்பகத்திற்கு தனி சின்னத்தை(Mascot) அறிவித்துள்ளது.
  • "Bhoorsingh The Barasingha" என்ற ஒரு வகை மானினை சின்னமாக அறிவித்துள்ளது.
  • "Power Tax India Scheme"-- விசைத்தறி(Powerloom) துறையினை மேம்படுத்தவும் விசைத்தறி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கவும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம்- இதனை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் "Smiti Irani" ஈரோடில்(Erode) தொடங்கி வைத்தார்.- இத்திட்டத்தின் மூலம் "தமிழ்நாடு மற்றும் மஹாரஷ்ட்ரா" அதிக பலனை பெறும்.
  • ஜுலையில் நடைபெறும் "Asian Athletics Championship 2017" போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற உள்ளது.
  • பிரபல தபேலா இசைக்கலைஞர் "ஜாகிர் உசேனின்" வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும் புத்தகம் "Zakir Hussain: A life for Music,In conversation With Nasreen Munil Kabir" என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது- இதனை "Nasreen Munil Kabir" எழுதியுள்ளார்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய  துணை வேந்தராக "Suniana Singh" நியமிக்கப்பட்டுள்ளார்.
  • # "Global Nutrition Report 2016"-- பெண்களில் அனிமியா நோய் ஏற்படுபவர்களின் பட்டியலில் இந்தியா 170வது இடத்தில் உள்ளது- 5 வயதுக்கு உற்பட்டவர்களில் இந்நோய் தாக்குபவர்கள் பட்டியலில் இந்தியா 114வது இடத்தில் உள்ளது.
  • ஜம்மு & காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக "Badar Durrez Ahmed" நியமிக்கப்பட்டுள்ளார்.
  • # CIRDAP Centre-- CIRDAP மையம் ஹைதராபாத்தில் அமைய உள்ளது.- இதற்காக மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும் "Centre on Integrated Rural Development for Asia and The Pacific(CIRDAP) உடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
  • நாட்டிலேயே முதன் முறையாக பசுக்களை படுகொலை(Cow Slaughter) செய்பவர்களுக்கு மரணத்தண்டனை வழங்க வழி செய்யும் மசோதாவை குஜராத் மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
  • Pradhan Mantri Awass Yojana-Grahmin(PMAYG) திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரும் மாநிலங்களில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது- இத்திட்டம் கிராமப்புற ஏழைகளுக்கு வீடு கட்டித்தர ஜீன் 25,2015ல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட திட்டம்.
  • போர்ச்சுகல் நாட்டின் "Maderia" தீவில் உள்ள விமான நிலையத்திற்கு பிரபல கால்பந்தாட்ட வீரர் "Cristiano Ronaldo"வின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • BRICS வங்கி அல்லது New Development Bank இந்தியாவிற்கு தனது முதல் கடனை ஒதுக்கியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்த இவ்வங்கி $350 மில்லியன் தொகையை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
  • சீனாவின் "Xinjiang" பகுதியில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பர்கா அணிய(Burkhas) மற்றும் தாடி வைத்து இருக்க அந்நாடு தடை விதித்துள்ளது.
  • பால் உற்பத்தியில் தமிழகம் 10 வது இடம் பிடித்துள்ளது.குஜராத் மாநிலம் முதல் இடம் வகிக்கிறது.
  • நாடெங்கிலும் 128 புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை மேற்கொள்ள 5 விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் வரும் செப்டம்பர் மாதம் சேலத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
  • ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பெலாரஸ் நாட்டில் நீண்ட காலம் வேலையில்லாமல் இருப்பவர்கள் மீது ‘சமூக ஒட்டுண்ணி’ என்னும் வரி விதிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
  • உலகம் முழுவதும் யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்கும் முயற்சியாக சீனாவில் யானைத் தந்தங்களைப் பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்கூடங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய டைனோசர் “காலடித் தடம்” கண்டுபிடிப்பு பிடிக்கப்பட்டுள்ளது. 5 அடி 9 அங்குலம் நீளமுள்ள காலடித் தடத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஆஸ்திரேலியாவின் பொலிவியாவில் கடந்த ஆண்டு ஜூலையில் நீண்ட கழுத்துள்ள சவுரோபோட் வகை டைனோசரின் 3 அடி 9 அங்குலம் நீளமுள்ள காலடித்தடம் கண்டுபிடிக்கப்பட்டதே இதுவரையிலான சாதனை அளவாக இருந்தது.இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் டேம்பியன் தீபகற்பத்தில் 5 அடி 9 அங்குல நீளமுள்ள டைனோசரின் காலடித்தடத்தை ஆய்வாளர்கள் குழு தற்போது கண்டுபிடித்துள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் காலடித்தடத்திலேயே இதுதான் மிகப் பெரியதாகும். இதுவும் நீண்ட கழுத்துள்ள சவுரோபோட் வகை டைனோசரின் காலடித்தடம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சவுரோபோட் வகை டைனோசர்கள் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக உலகில் வாழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
  • சர்வதேச ஆற்றல் குழுமத்தின் (International Energy Agency) புதிய உறுப்பு நாடாக இந்தியா இணைந்துள்ளது.
  • துருவப்பகுதியில் வாழும் பனிக்கரடிகளுக்கான அருங்காட்சியகம் உலகில் முதன் முறையாக #ப்ரான்ஸில் துவங்கப்பட்டுள்ளது.
  • பெண்களுடன் சுற்றும் இளைஞர்களை பிடிக்க மத்திய பிரதேச மாநிலம் புதிதாக அறிவித்துள்ள படை பெயர்=ஆன்டி-மஜ்னு-இதே போன்று உத்திரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படை பெயர்= ஆன்டி ரோமியோ.
  • தெற்காசியாவின் மிக நீளமான சுரங்கப் பாதை= சேனானி- நஷ்ரி சுரங்கப்பாதை(காஷ்மீர்).
  • ஸ்வச் ரயில் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் அமைந்துள்ள
1] பார்மர் - முனாவாப்
2] பிபட் ரோட்- பைலாரா
ஆகிய இரு ரயில்வே வழித்தடங்கள் பசுமையக ரயில்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக மானாமதுரை-ராமேஸ்வரம் முதல் பசுமையக ரயில்வே வழித்தடமாகும்.
  • மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • கொல்கத்தாவில் போனிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாண  எரிவாயுவை பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்தை கண்டுபிடித்துள்ளது.
  • அசோக் லேலண்ட் நிறுவனம் பேருந்தை தயாரித்துள்ளது.
  • ம.பி. மாநிலத்தில் முஸ்லிம் மதரஸா கல்வி வாரியம் சார்பில் வெளியாகும் பாடத்திட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகள் இடம்பெற உள்ளன.
  • சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மத்தியபிரதேச மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
  • இந்திய கிரிக்கெட் வீரர்களை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வதற்காக சச்சின் டென்டுல்கர், 100MB என்ற மொபைல் செயலியை வெளியிட்டுள்ளார்.
  • Central Board of Excise & Customs ன் தலைவராக வனஜா சர்னா நியமனம்.
  • ஷிவ் ஷங்கர் செளராசியா ( Shiv Shankar Chowrasia )-இந்தியா ஓபன் கோல்ப் 2017பட்டத்தை வென்றுள்ளார்.
  • உலகின் முதல் வணிக ரீதியான ஹைபர் லூப் போக்குவரத்து அமைப்பு துபாய் மற்றும் அபு தாபி-க்கு இடையே கட்டப்பட உள்ளது.
  • இன்றியமையாத அம்பேத்கர் என்ற  புத்தகத்தின் ஆசிரியர் = பாலச்சந்திர முங்கேகர் .
  • திப்பு சுல்தானின் ஆயுதக் களஞ்சியம் அது இருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தள்ளி இடம்பெயர்த்துள்ளது.
  • ஜான் சுர்தீஸ் -    இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் பந்தயம் இரண்டிலும் உலக சாம்பியன்ஷிப் பட்டதைப் பெற்ற ஒரே வீரர் இவர் சமீபத்தில் காலமானார்.
  • PAU-Bt 1, F-1861, RS-2013-       முதல் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள்-இது பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.
  • போயல் ஈகிள் (Foal Eagle)-இது அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சி ஆகும்.
  • அமெரிக்காவில் உள்ள சிறுமகாணமான EI SALVADOR என்ற பகுதி தனிமம்& சுரங்கத்தொழிலுக்கு முற்றிலும் தடைவிதித்துள்து.முன்னதாக இந்தியாவில் உத்ரகாண்ட் மாநில அரசு 4மாநிலங்களுக்கு சுரங்க தொழிலுக்கு தடை விதித்துள்ளது.
  • திருப்பதி கோயிலின் வரலாறு,  விழாக்கள் போன்ற சிறப்புகளையும் தொகுத்து Inside Tirumala Tirupati என்ற ஆவணப்படத்தை நேஷனல் ஜியாகிரஃபி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.மேலும் உகாதி திருநாளில் கோவிந்தா திருமலை தேவஸ்தானம் என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் குஜராத் சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் இந்த 220 மீட்டருக்குள் உள்ள மதுகடைகளை மூடும்படி புதிய உத்தரவைப் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது(முன்னதாக 500மீ).
  • குவாலியர் மகாராணி விஜய ராஜே சிந்தியாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா எழுதிய நூல் = ராஜபாதையில் இருந்து மக்கள் மன்றம் நோக்கி ( Rajpath Se Lok PathPar ).
  • உலக பணக்காரர் வரிசையில் அமேசானின் தலமைசெயல் அதிகாரியான ஜெப் பியோஸ் இரண்டாம்இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
  • பிசிசிஐ , உள்ளூரில் நடத்தப்படும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டி தொடர்களை வென்ற மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • சார்க் நாடுகளால் ஏவப்படும் ஜிசாட்-9 செயற்கைகோள் ஏப்ரல் மாதத்திற்குள் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மத்தியபிரதேசத்தில் உள்ள கன்ஹா தேசிய பூங்கா ( Barasingha or swamp deer ) நீண்ட கொம்புகளை கொண்ட மானை தனது அதிகார பூர்வ இலச்சினையாக அறிவித்துள்ளது.
  • கர்நாடக மாநிலத்தில் உள்ள உணவகத்தின் பெயரான நம்ம உணவகம் என்னும் பெயரை இந்திரா உணவகம் என அம்மாநில அரசு பெயர் மாற்றம் செய்யப்ட்டுள்ளது.
  • மத்திய பிரதேச மாநில அரசின் சாலை போக்குவரத்தினை மேம்படுத்த இந்தியா புதிய வளர்ச்சி வங்கியுடன் ( $350 million ) ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
  • டாக்டர் பிசி ராய் விருதுகள்_2017:
1] கீதாலக்சுமி
2] பழனி வேலு
3] ஆனந்த் கேஹ்ஹர்
===============
2017_பத்மவிபூஷன் விருது
1]. முரளிமனோகர் ஜோசி
2]. தேவிபிரசாத் திவேதி
==================
பத்மஸ்ரீ விருதுகள்
1]. விராத் கோஹ்லி
2]. தீபா மாலிக்
3]. தீபா கர்மாகர்
4]. சாக்ஷி மலிக்
5]. சேகர் நாயக்
6]. அனுராதா பட்வால்
  • இந்திய கப்பற்படையில் பருவநிலை கண்காணிக்கும்  புதிய வானிலையியல் ஆய்வு மையம் "IAAMS" அரக்கோணத்தில் உள்ள "INS Rajali" கடற்படை விமான தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.- IAAMS- Integrated Automatic Aviation Meteorological Systems.
  • UNவைச் சேர்ந்த உலக உணவு திட்ட அமைப்பின்(WFP) புதிய செயல் இயக்குநராக "David Beasley" நியமிக்கப்பட்டுள்ளார்.- WFP- World Food Programme.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் அமைச்சர் "Priti Patel" இந்த ஆண்டிற்கான "Pravasi Bharathiya Samman Award"ற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மத்திய அரசு சணல் மற்றும் பருப்பு வகைகளுக்கு(Wheat and Turdal) 10% ஏற்றுமதி வரியை திணித்துள்ளது.
  • "Montenegro": NATO அமைப்பில் சேர உள்ள 29வது நாடு.
  • இந்திய இராணுவத்தில் உள்ள "Rashtriya Rifles" படைப்பிரிவைப் பற்றி "Home of The Brave" என்ற புத்தகத்தை "Nitin A Gokhale" எழுதி வெளியுட்டுள்ளார்.
  •  இந்திய விளம்பரபடுத்துதல் நிலை குழுவின்(ASCI) ஒரே உறுப்பினராக "Paytm" நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.- ASCI- Advertising Standards Council of India.
  • உத்ரகாண்ட் மாநிலத்தில் 4 மாதங்களுக்கு சுரங்கத் தொழிலுக்கு(Mining) முற்றிலும் தடை விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  • "Odisha": வங்கிகள் இல்லாத இடங்களுக்கு சுய உதவிக் குழுக்கள்(Self Help Groups) மூலம் வங்கிச் சேவையை வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக உள்ளது.
  • 2014,2015 மற்றும் 2016ம் ஆண்டிற்கான "Dr.B.C.Roy National Award" மற்றும் 2008,2009,2010,2014,2015 மற்றும் 2016ம் ஆண்டிற்கான "Hari Om Ashram Alembic Research Award"களை குடியரசுத் தலைவர் ப்ரணாப் முகர்ஜி வழங்கினார்.- இவ்விரண்டு விருதுகளும் "மருத்துவ துறையில்"(Medical Field) சிறந்து விளங்குபர்களுக்கு வழங்கும் விருதாகும்.
  • National Tribal and North East Comclave 2017 புதுடெல்லியில் நடந்து முடிந்தது- இதனை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் "லலித் கலா அகாதாமி"(Lalit Kala Akademi)ல் நடத்தப்பட்டது.
  • இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள "FIFA U-17" போட்டிகளுக்காக இந்தியாவில் கால்பந்தை பிரபலப்படுத்த தொடங்கப்பட்ட "Mission XI Million Programme" திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக பாரளுமன்ற உறுப்பினர்கள் கால்பந்து விளையாடும் நிகழ்ச்சியை சபாநாயகர் "Sumitra Mahajan" தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாடு கிரிக்கெட் அணி "Deodhar Trophy"ஐ வென்றுள்ளது- இதன் மூலம் உள்ளூரில் நடக்கும் ரஞ்சி, இரானி, விஜய் ஹசாரே, சயத் முஷ்டாக் , தியோதர் ஆகிய கோப்பைகளை வென்றுள்ள முதல் மாநில அணி என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது..
  • கேரள மாநில அரசின் புதிய தலைமை செயலராக(Chief Secretary) "Nalini Netto" நியமிக்கப்பட்டுள்ளார்- இவர் தமிழக தலைமை செயலர் "Girija Vaidyanathan"ன் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • INS Rajaliன் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி அரக்கோணத்தில் உள்ள கப்பற்படை விமான தளத்தில் கொண்டாடப்பட்டது.
  • மின் உற்பத்தியில் நிகர இறக்குமதியளாராக இருந்த இந்தியா முதன் முறையாக நிகர ஏற்றுமதியளாராகியுள்ளது(1st time India has turned around from a net importer of electricity to Net Exporter of electricity)- இதனை மத்திய மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
  • எப்ரல் 1 முதல் BS-III(Bharath Stage-3) வாகனங்களை விற்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது- மேலும் கனரக தொழிற்சாலை நிறுவனளை விட மக்கள் நலனே முக்கியம் என கூறியுள்ளது.
  • இந்திய இராணுவத்தின் தலைமை தளபதி "Bipin Rawat" நேபாள நாட்டின் உயரிய இராணுவ கௌரவமான "Honorary General Of Nepalese Army" என்ற கௌரவத்தை பெற்றுள்ளார்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த "Gurinder Chandha" 2017ம் ஆண்டிற்கான "Sikh Jewel Award"ற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • நீர்த் துறையில் இணைந்து செயல்பட ஏதுவான இடங்களை கண்டறிய  இந்தியா மற்றும் "Bavaria"ம் இணைந்து குழு ஒன்றை அமைத்துள்ளனர்.
  • பிரபல இந்தி நடிகர் "Anupam Kher" இந்த ஆண்டிற்கான கலா ரத்தன் விருதை(Kala Ratan Award) பெற்றுள்ளார்.
  • ஒருங்கிணைந்த கட்டணங்களை செலுத்துவதை எளிமையாக்க ICICI வங்கி "Truecaller" உடன் இணைந்து செயல்பட உள்ளது.
  • உலகின் முதல் "Nanocar Race" பிரான்சில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
  • அமெரிக்கவைச் சேர்ந்த "The Atlantic Council"ன் ஆலோசனை குழுவில் "Anil Ambani" சேர்க்கப்பட்டுள்ளார்.
  • "Sima Kamil": பாகிஸ்தானில் வங்கிக்கு தலைமை ஏற்கும் முதல் பெண்மணி- பாகிஸ்தானில் உள்ள "United Bank Limited"ன் தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள வணிக வங்கிக்கு தலைமையற்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • "Brazil": 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் நாடு- மேலும் நட்சத்திர வீரர் "Lionel Messi"க்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அர்ஜென்டினா அணி தகுதி பெறுவது கேள்விக் குறியாகியுள்ளது.
  • 2000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அரண்மனை "Mexico"வில் கண்டறியப்பட்டுள்ளது

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel