Type Here to Get Search Results !

TPNSC POLITICAL SCIENCE : CHIEF ELECTION COMMISSIONER OF INDIA


DOWNLOAD PDF
  1. TNPSC GR 2/2A இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF 
  2. TNPSC GR 1 இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF 
  3. TNPSC GR 4/VAO  இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF 


இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் 


இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர், இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாக, விருப்புவெறுப்பின்றி, எவ்வமைப்பையும் சாராமால் நடத்துவதற்கு வழிவகை செய்பவர்.
இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகள் அல்லது 65 அகவை (வயது) நிறைவுறும் வரை எது முன் நிகழ்கின்றதோஅதைப் பொருத்து இவர்கள் பணிக்காலம் கணக்கிடப்படுகின்றது.
இந்தியத் தலைமை நீதிபதிகளின் படிநிலையில் கருதப்படும் இவர்கள் ஊதியமும் அவர்கள் அளவிற்கு ஈடாகப் பெறுகின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையரை நடத்தை விதி மீறலைக் (இம்பீச்மென்ட்) காரணம்காட்டி நாடாளுமன்றத்தில் அவர் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) தீர்மானம் வெற்றிபெற்றாலின்றி அவரை வேறுஎவ்வகையிலும் பணியிலிருந்து நீக்கவியலாது.
இதன் அதிகாரக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இவ்வாணையத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உலகநாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவே முதன் முதலாக முழுவதும் மின்னணு எந்திரத்தின் மூலம் கடந்தப் பொதுத்தேர்தலை நடத்திக்காட்டியது. இது தேர்தல் ஆணையத்தின் சீரிய முயற்சியால் செயலுருப்பெற்றது.
இவ்வாணையம் வெகுநாட்களாக செயல்பாட்டில் இருந்தாலும் இதன் மீது மக்கள் பார்வை விழக் காரணமாயிருந்தவர் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான திரு. டி. என். சேஷன், அவர் பணிபுரிந்த ஆண்டு 1990 முதல் 1996 வரை. அவர் பணிக் காலத்தில் தான் அதுவரை தேர்தல்களில் ஊழல் மிகுந்திருந்த நிலை இவரின் கண்டிப்புமிக்க, நேர்மையான செயலால் சற்றுத் தணிக்கப்பட்டது..
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்:
வரிசை எண்தேர்தல் ஆணையர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1சுகுமார் சென் ஐ சி எஸ் (பி.1899)மார்ச் 21, 1950டிசம்பர் 19, 1958
2கே.வி.கே. சுந்தரம்டிசம்பர் 20, 1958செப்டம்பர் 30, 1967
3எஸ்.பி. சென் வர்மாஅக்டோபர் 1, 1967செப்டம்பர் 30, 1972
4நாகேந்திர சிங்அக்டோபர் 1, 1972பெப்ரவரி 6, 1973
5டி. சுவாமி நாதன்பெப்ரவரி 7, 1973ஜூன் 17, 1977
6எஸ்.எல். சக்தார்ஜூன் 18, 1977ஜூன் 17, 1982
7ஆர்.கே. திரிவேதிஜூன் 18, 1982டிசம்பர் 31, 1985
8ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரிஜனவரி 1, 1986நவம்பர் 25, 1990
9வி.எஸ். ரமாதேவிநவம்பர் 26, 1990டிசம்பர் 11, 1990
10டி. என். சேஷன்டிசம்பர் 12, 1990டிசம்பர் 11, 1996
11எம். எஸ். கில்டிசம்பர் 12, 1996ஜூன் 13, 2001
12ஜே.எம். லிங்டோஜூன் 14, 2001பெப்ரவரி 7, 2004
13டி.எஸ். கிருஷ்ணமூர்த்திபெப்ரவரி 8, 2004மே 15, 2005
14பி.பி. தாண்டன்மே 16, 2005ஜூன் 29, 2006
15என். கோபாலசுவாமிஜூன் 29, 2006ஏப்ரல் 20, 2009
16நவீன் சாவ்லாஏப்ரல் 21, 2009சூலை 29, 2010
17எஸ். ஒய். குரேசிசூலை 30, 2010சூன் 10, 2012
18வீ. சு. சம்பத்சூன் 11, 2012சனவரி 15, 2015
19அரிசங்கர் பிரம்மாசனவரி 16, 2015ஏப்ரல் 18, 2015
20சையத் நசிம் அஹ்மத் ஜெய்திஏப்ரல் 19, 2015சூலை 5, 2017
21அச்சல் குமார் ஜோதிசூலை 6, 2017சனவரி 22, 2018
22ஓம் பிரகாஷ் ராவத்சனவரி 23, 2018டிசம்பர் 1, 2018
23சுனில் அரோராடிசம்பர் 2, 2018தற்போது பணியில்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel